Advertisment

இலங்கையில் போராடும் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்த பிரதமர் மஹிந்த ராஜபக்சே

இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே, அரசாங்கத்தில் பங்கு வகிக்கும் அவருடைய மொத்த குடும்பத்தினரும் வெளியேற வேண்டும் என்று இளைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்களை நாட்டுக்குக் கொடுத்து கடனைச் செலுத்த வேண்டும் என்று கோருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Sri Lanka, Lanka Crisis, PM Mahinda Rajapaksa, economic crisis, இலங்கையில் போராடும் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்த பிரதமர் மஹிந்த ராஜபக்சே, கோட்டபய ராஜபக்சே, Gotabaya, Tamil Indian Express

இலங்கை அதிபர் ராஜபக்சே, அந்நாட்டு அரசாங்கத்தில் பங்கு வகிக்கும் அவருடைய மொத்த குடும்பத்தினரும் வெளியேற வேண்டும் என்று இளைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதே நேரத்தில், அவர்கள் சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாகக் கூறப்படும் சொத்துக்களை நாட்டுக்குக் கொடுத்து கடனைச் செலுத்த வேண்டும் எனவும் இளைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisment

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே, போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தால், அவர்களுடைய பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்படும் என கூறியதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அதிபர் கோட்டபய ராஜபக்சே மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் இலங்கை அரசாங்கத்தில் இருந்து பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தும் போராட்டக்காரர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்சே புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார்.

இலங்கையில் இன்று புதன்கிழமை ஐந்தாவது நாளாக போராட்டம் நடந்து வருகிறாது. சனிக்கிழமை தொடங்கிய இந்த போராட்டம், ஊழல் அரசியல் கலாச்சாரத்தை முழுவதுமாக மாற்றக் கோரி இளைஞர்களால் 24 மணிநேரமும் நடத்தப்படுகிறது. இலங்கை 1948 இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து ஊழல் அரசியல் கலாச்சாரம் நிலவி வருவதாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, அதிபர் கோட்டபய ராஜபக்சேவின் செயலகத்திற்கு அருகில் அமைந்துள்ள காலே முகத்திடலில் முகாமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் கலந்துரையாட மஹிந்த ராஜபக்சே தயாராகவுள்ளார். போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தால், அவர்களுடைய பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்படும் என்று பிரதமர் கூறியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சே, அந்நாட்டு அரசாங்கத்தில் பங்கு வகிக்கும் அவருடைய மொத்த குடும்பத்தினரும் வெளியேற வேண்டும் என்று இளைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதே நேரத்தில், அவர்கள் சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாகக் கூறப்படும் சொத்துக்களை நாட்டுக்குக் கொடுத்து கடனைச் செலுத்த வேண்டும் எனவும் இளைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே, இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சேவின் மூத்த சகோதரர் ஆவார். இளைய சகோதரர் பசில் ராஜபக்சே, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த மாத தொடக்கத்தில் ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்படும் வரை அவர் இலங்கையின் நிதி துறையை வைத்திருந்தார். மூத்த சகோதரர் சமல் வேளாண் அமைச்சராக உள்ளார். மருமகன் நாமல் விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ளார்.

இளைஞர்களை காலே முகத்திடலில் திரள வலியுறுத்தி சமூக ஊடகங்களில் எதிர்ப்புப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. தவிர, அந்நிய செலாவணி நெருக்கடியை அரசாங்கம் தவறாகக் கையாண்டதால், அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது என்று குற்றம்சாட்டி நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மக்களின் அதிருப்திக்கு பதிலளிக்கும் விதமாக தனது அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்த இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே, ஐக்கிய அமைச்சரவையில் இணையுமாறு அவர் எதிர்க்கட்சிகளுக்கு விடுத்த அழைப்புக்கு ஆதரவைப் பெறத் தவறினார்.

இதனிடையே, இலங்கை பாராளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அதிபர் கோட்டபயவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் திர்மானம், அதிபர் கோட்டபயவுக்கு எதிரான குற்றச்சாட்டு தீர்மானம், மற்றும் 2020 இல் ஜனாதிபதிக்கு முழு அதிகாரம் அளித்துள்ள அரசியலமைப்பின் 20வது திருத்தங்களை ரத்து செய்யும் தீர்மானம் ஆகிய மூன்று தீர்மானங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவித்தது.

இலங்கையின் முன்னாள் அதிபரும் ஆளும் கூட்டணிக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன செவ்வாய்கிழமை இரவு செய்தியாளர்களிடம், இனி அரசாங்கத்துடனான அரசியல் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் முட்டுக்கட்டையை போக்க அனைத்துக் கட்சி இடைக்கால அரசு அமைப்பது உள்ளிட்ட 11 அம்ச திட்டத்தை முன்வைத்திருந்தனர்.

1948 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நீண்ட நேர மின்வெட்டு, எரிபொருள், உணவு மற்றும் பிற அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு தொடர்பாக மக்கள் பல வாரங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதிபர் கோட்டபய ராஜபக்சே தனது அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் நியாயப்படுத்தி பேசுகையில், “அந்நியச் செலாவணி நெருக்கடியை தாம் உருவாக்கவில்லை என்றும், பொருளாதார வீழ்ச்சி கொரோனா காரணமாக, இலங்கையின் சுற்றுலா வருமானம் மற்றும் உள்நாட்டிற்கு அனுப்பப்படும் பணம் குறைந்ததால் ஏற்பட்டது” என்றும் கூறினார்.

பெரும் அந்நிய செலாவணி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, சர்வதேச நிதி அமைப்புடன், (IMF) விவாதங்கள் முடிவடையும் வரையிலும், வேலைகளை உள்ளடக்கிய ஒரு விரிவான கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைத் தயாரிக்கும் வரையிலும், வெளி நாட்டுப் பொதுக் கடன் பெறும் முயற்சியை செவ்வாய்க்கிழமை இடைநிறுத்தியுள்ளது.

அனைத்து சர்வதேச பத்திரங்களுக்கும், மத்திய வங்கிக்கும் வெளிநாட்டு மத்திய வங்கிக்கும் இடையிலான பரிமாற்றங்கள் தவிர்த்து அனைத்து இருதரப்பு கடன்கள், வணிக வங்கிகள் மற்றும் நிறுவன கடன் வழங்குபவர்களுடனான அனைத்து கடன்களுக்கும் இந்த கொள்கை அமலில் இருக்கும் என்று இலங்கை நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கை மக்களிடம் திங்கள்கிழமை தொலைக்காட்சி வழியாக பேசிய, பிரதமர் மஹிந்த ராஜபக்சே, பதவி விலகுவதற்கான அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், மக்களின் துயரங்களை தாம் புரிந்து கொண்டுள்ளதாகக் கூறினார்.

“நாம் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். 30 ஆண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது போலவே பொருளாதார பிரச்சினையையும் தீர்ப்பதற்கு பொறுப்பேற்போம்” என்று அவர் 2009-ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியைக் குறிப்பிட்டார்.

தனித் தமிழர் தாயகத்திற்கான பிரிவினைவாதப் போரை வழிநடத்திய விடுதலைப் புலிகள் இயக்கம், 2009-ம் ஆண்டு அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்துடன் இலங்கை இராணுவத்தால் நசுக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை அரசாங்கம் 24 மணிநேரமும் உழைத்து வருவதாக மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு போராட்டக்காரர்களிடம் வேண்டுகோள் விடுத்த அவர், தெருக்களில் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் நாட்டிற்கு வருகிற டாலர் வருவாயை இழக்கிறோம் என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Srilanka Rajapakse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment