Sri Lanka Economic Crisis: அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு, ஈஸ்டர் நாள் குண்டு வெடிப்புகள், கொரோனா தொற்று, குறைந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை என்று இலங்கையின் பொருளாதார நிலைமை சீர் குலைய ஆரம்பித்த சூழலில் கடந்த ஆண்டு, இயற்கை விவசாயத்திற்கு மாறுகிறது இலங்கை என்ற அறிவிப்பை வெளியிட்டு ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் இறக்குமதிக்கு தடை விதித்தது இலங்கை அரசு. அரிசி முதற்கொண்டு சில அத்தியாவசியப் பொருட்களில் தன்னிறைவு பெற்றிருந்த நாடு ஒரே வருடத்தில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது.

அரிசியை வழங்கும் இந்தியா
இந்திய வியாபாரிகள் 40 ஆயிரம் டன் அரிசியை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் இருக்கின்றனர் இந்திய வியாபார்கள். இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்திக்க துவங்கிய காலத்தில் இருந்து டெல்லி அனுப்பும் முதல் முக்கிய உதவி இதுவாகும்.
வர்த்தக பற்றாக்குறை
இலங்கையில் ஜனவரி மாதம் வர்த்தக பற்றாக்குறை 859 மில்லியன் டாலர்களாக இருக்கிறது சென்ட்ரல் பேங்க் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் அந்நாட்டின் இறக்குமதி 23.1% ஆக உயர்ந்து 1.96 பில்லியனாக அதிகரித்தது. ஏற்றுமதி 17.5% அதிகரித்து 1.10 மில்லியன் டாலர் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
இலங்கையின் சந்தை நிலவரம் என்ன?
இலங்கையின் கொழும்பு பங்கு சந்தை தொடர் மின்வெட்டு காரணமாக வேளை நேரத்தை 4.5 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைத்தது. வர்த்தகர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க செயல்பட்டும் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்துள்ளனர் முதலீட்டாளர்கள்.

எமெர்ஜென்சியை அறிவித்த இலங்கை அரசு
பணவீக்கம் உயர்வு, வரி குறைப்பு போன்ற காரணங்களால் இலங்கையின் பொருளாதாரம் மோசமடைய துவங்கியது. அரசு இதனை சரியாக கையாளாத காரணத்தை கண்டித்து பலரும் வியாழக்கிழமை அன்று கொழும்புவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினார்கள். போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, கோத்தபய வீட்டிற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்தை தீயிட்டு கொளுத்தினார்கள். இந்த நிகழ்விற்கு காரணமாக இருந்த 54 பேரை கைது செய்தது இலங்கை காவல்துறை. அன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெள்ளிக் கிழமை இரவு கோத்தபய ராஜபக்ஷே நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil