இலங்கையில் 300 மில்லியன் டாலர் முதலீட்டில் சீனாவின் டயர் தொழிற்சாலை

இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகம் அருகே 300 மில்லியன் டாலர் மதிப்பு முதலீட்டில் (ரூ.2,210 கோடி) அந்நாட்டில் சீனா மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை அமைக்கிறது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

Sri Lanka, china 300 million dollar investment in sri lanka, இலங்கையில் சினாவின் டயர் தொழிற்சாலை, இலங்கை, சீனா, Chinese tyre factory in sri lanka

இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகம் அருகே 300 மில்லியன் டாலர் மதிப்பு முதலீட்டில் (ரூ.2,210 கோடி) அந்நாட்டில் சீனா மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை அமைக்கிறது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

மேற்கத்திய நாடுகளும், பிராந்திய சக்தியான இந்தியாவும், இலங்கையின் சாலை உள்கட்டமைப்பு முயற்சி திட்டங்கள் மூலம் இலங்கையில் சீனா செல்வாக்கு குறித்து நீண்டகாலமாக கவலை கொண்டுள்ளன.

ஹம்பாந்தோட்டா துறைமுகத்துக்கு அருகே இந்த தொழிற்சாலை அமைய உள்ளது. இந்த துறைமுகம் சீன நிறுவனத்திற்கு 2017ம் ஆண்டில் குத்தகைக்கு விடப்பட்டது. அதை கட்டியெழுப்ப இலங்கை பெய்ஜிங்கிடம் இருந்து 1.4 பில்லியன் டாலர் கடனைக் கட்டத் தவறியதால் சீனா டயர் தொழிற்சாலையை அமைக்க பயன்படுத்திக்கொண்டுள்ளது.

கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய ஊடக அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்லா, தாராளமான வரி சலுகைகளை அனுமதிக்கும் சட்டத்தின் கீழ் டயர் தொழிற்சாலையை அமைக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.

சாண்டோங் ஹஹுவா டயர் நிறுவனம் குறைந்தபட்சம் 80% உற்பத்தியை ஏற்றுமதி செய்யும், மீதமுள்ளவற்றை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாட்டின் 2021 வரவுசெலவுத் திட்டத்தை வெளியிட்ட சில வாரங்களிலேயே இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. கொழும்பில் ஒரு பெரிய சீன ரியல் எஸ்டேட் அபிவிருத்திக்கும் அதிக முதலீட்டை ஈர்ப்பதற்கும் இலங்கையின் பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கும் நிதியை அறிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்தில் 2014 இல் தொடங்கிய 1.4 பில்லியன் டாலர் நில மீட்பு திட்டம் இலங்கையின் தற்போதைய நிதி அளவை இரட்டிப்பாக்கியுள்ளது.

ராஜபக்ச 2005-15 ஆண்டுகளுக்கு இடையில் ஜனாதிபதியாக இருந்தபோது ​​கொழும்பு சீனாவிலிருந்து பில்லியன் கணக்கான தொகையை கடன் வாங்கியது. பல உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக கடன் வாங்கி மலை போல குவித்தது. விமானங்களின் பற்றாக்குறை காரணமாக அதன் சர்வதேச விமான நிலையம் உட்பட அதனை ஊடகங்களால் ‘உலகின் வறட்டு பெருமை’ என்று அழைக்கப்படுகிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sri lanka got 300 million dollar investment chinese tyre factory

Next Story
இலங்கை விமான நிலையங்களை மீண்டும் திறந்தால் டூரிஸ்ட்களுக்கு 6 மாத விசா வழங்க திட்டம்Sri Lanka govt proposed to issue 6-month visas for tourists, இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு 6 மாத விசா, இலங்கை, sri lanka airports, sri lanka airports re-open, coronavirus, covid-19
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com