Protesters storm Sri Lankan President Gotabaya Rajapaksa’s residence; 7 injured in clashes: இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே, சனிக்கிழமையன்று அதிபர் மாளிகையைச் சுற்றிவளைத்து எதிர்ப்பாளர்கள் தாக்கியதால், மாளிகையை விட்டு வெளியேறியதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் இரண்டு போலீசார் உட்பட குறைந்தது ஏழு பேர் காயமடைந்ததாக செய்தி நிறுவனம் பி.டி.ஐ தெரிவித்துள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையை முற்றுகையிட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர் மற்றும் தடுப்புகளை உடைத்து முன்னேறினர். இரண்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் வட்டாரங்கள் செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம், வார இறுதியில் திட்டமிடப்பட்ட பேரணிக்கு முன்னதாக அதிபர் கோட்டாபய ராஜபக்சே தனது பாதுகாப்பிற்காக வெள்ளிக்கிழமை அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறினார்.
போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பினர். அதிபர் மாளிகை கட்டிடத்தின் அறைகள் மற்றும் தாழ்வாரங்கள் வழியாக மக்கள் ஊர்வலம் சென்றபோது, ராஜபக்சேவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதை வீடியோ கிளிப்புகள் காட்டுகின்றன. ஆங்கிலேய ஆட்சிக் கால கட்டிடத்திற்கு வெளியே உள்ள மைதானத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் காணப்படாத நிலையில் போராட்டக்காரர்கள் பலர் சுற்றித் திரிந்தனர்.
நடந்து வரும் போராட்டங்களில் இரண்டு போலீசார் உட்பட குறைந்தது 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.
உள்ளூர் செய்தி தொலைக்காட்சியான நியூஸ்ஃபர்ஸ்ட் சேனலின் வீடியோ காட்சிகள், இலங்கைக் கொடிகள் மற்றும் தலைக்கவசங்களை ஏந்தியவாறு சில எதிர்ப்பாளர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததைக் காட்டியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும், கோபமாக உள்ள கூட்டத்தினர் அதிபர் மாளிகையைச் சுற்றி முற்றுகையிட்டு வருவதைத் தடுக்க முடியவில்லை என்று வீடியோவை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
"ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவாயிலை அடைந்த நிலையில், தடுப்புகளை அடுக்கி வைத்துவிட்டு, போலீசார் அப்பகுதியில் இருந்து பின்வாங்குவதைக் காண முடிந்தது. காற்றில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது, தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படுகின்றன,” என்று ராய்ட்டர்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், மார்ச் மாதம் முதல் ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதன்பிறகு, நாடு ஏற்றுமதியைப் பெறுவதை நிறுத்தியதால், எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளது. நிலைமை மோசமடைந்ததால் பள்ளிகள் மூடப்பட்டன மற்றும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிபொருட்களுக்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.