இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினரே காரணம் என அந்நாட்டு மக்கள் அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா கடிதத்தை அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினரே காரணம் என அந்நாட்டு மக்கள் அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு தப்பிச் சென்று அங்கிருந்து சிங்கப்பூர் சென்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா கடிதத்தை அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார்.
இலங்கை நாடாளுமன்றம் அடுத்த வாரம் புதிய முழுநேர அதிபரை நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும், தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அதிபர் பதவிக்கு ஆளும் கட்சியின் முதல் தேர்வாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பியுள்ளார். கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் புதன்கிழமை இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற நிலையில், தனி விமானத்தில் சிங்கப்பூர் செல்ல அனுமதிக்கப்பட்டார். சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ள கருத்துப்படி, ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை அல்லது அவருக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவின் மாலியில் ஒரு நாள் கழித்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் சென்றடைந்தார். அவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதில் அதிபராக நியமித்து, ஜூலை 13 ஆம் தேதி இரவுக்குள் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனா, அவர் அதை செய்ய முடியவில்லை.
இதனிடையே, இலங்கை பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரி புதன்கிழமையன்று பிரதமர் அலுவலகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதனால், கொழும்பு மாவட்டத்தில் ஜூலை 14 ஆம் தேதி காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. பாராளுமன்றம் அடுத்த வாரம் ஒரு புதிய முழுநேர ஜனாதிபதியை நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிபர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கே ஆளும் கட்சியின் முதல் தேர்வாக இருப்பார் என்று கட்சியின் உயர்மட்ட வட்டாரம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கோத்தபய ராஜபக்சேவின் கூட்டாளியான விக்கிரமசிங்கேவின் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த குறைந்தது 45 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கண்ணீர்ப்புகைக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 26 வயது போராட்டக்காரர் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.