இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபக்சே; சிறுபான்மையினர் அச்சம்

இலங்கையில் வருகிற சனிக்கிழமை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர்களில் கோத்தபய ராஜபக்சே பெயரும் உள்ளதால் சிறுப்பான்மையினர் அஞ்சுகின்றனர்.

Deutsche Welle
இலங்கையில் வருகிற சனிக்கிழமை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர்களில் கோத்தபய ராஜபக்சே பெயரும் உள்ளதால் சிறுப்பான்மையினர் அஞ்சுகின்றனர்.

பல சிங்களவர்களுக்கு ராஜபக்சே என்பது நாட்டின் மீட்பரின் உருவகமாக உள்ளார். கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போருக்குப் பிறகு, தமிழீழ விடுதலை புலிகளை அழித்த சிறந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளராக கருதப்படுகிறார்.

இலங்கையின் சிறுபான்மையினருக்கு கோத்தபய ராஜபக்சே என்ற பெயர் அவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

ஆளும் சிங்கள பௌத்த பெரும்பான்மைக்கும் தமிழ் பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான மோதலின் போது சிறுபான்மை இன தமிழர்களின் உறவினர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர். இவை ராஜபக்சே போர்க் குற்றங்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

பொது பல சேனா (பி.பி.எஸ்) அல்லது பௌத்த சக்தி படை போன்ற பௌத்த கடினவாதிகளுடன் அவர் இணைந்திருப்பதால் முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர். அவர்கள் பல தசாப்தங்களாக சமூகத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டிவிட்டுவருகின்றனர். இந்த குழுக்கள் சிங்களவர்களை முஸ்லிம்களுக்கு சொந்தமான வணிகங்களை புறக்கணிக்கவும் முஸ்லீம் குடும்பங்களுக்கு சொத்துக்களை வாடகைக்கு விடுவதை நிறுத்தவும் முஸ்லிம் தீவிரவாதத்திற்கு எதிராக அதிகாரப்பூர்வமற்ற போலீஸ்காரர்களாக இருக்கவும் ஊக்குவித்துள்ளன.

கோத்தபயாவின் எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சிக்கு (எஸ்.எல்.பி.பி) சனிக்கிழமை அன்று நடைபெறும் தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதற்கு தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினர் வாக்குகள் அவசியம் தேவை.

2005 முதல் 2015 வரை இலங்கையை உறுதியான அதிகாரத்துடன் ஆட்சி செய்த மஹிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவை தற்போதைய வீட்டுவசதி அமைச்சரும், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் (யு.என்.பி) துணைத் தலைவருமான உறவினர் புதுமுகம் சஜித் பிரேமதாசாவால் எதிர்த்து முதன்மை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

ஒரு நுட்பமான சமநிலை நடவடிக்கை

சிறுபான்மையினரைப் பாதுகாக்க முடியும் என்பதை நிரூபிக்கும் அதே வேளையில், இருவருமே சிங்கள தேசியவாதிகளிடம் முறையிடுவதை சமப்படுத்த முயற்சிக்கின்றனர். பல தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இது ஒரு விவகாரமாகி வருகிறது.

இலங்கையின் துயரமான உள்நாட்டுப் போர் மே 2009 இல் வட கிழக்கில் முல்லைத் தீவில் எல்.டி.டி.இ. சரணடைந்த பின்னர் முடிந்தது. இறுதி நாட்களில் புலிகளின் வாயில் மூடப்பட்ட நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் லட்சக் கணக்கில் பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர்.

அவர்கள் இலங்கை இராணுவத்தால் ஷெல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டதால் அரசாங்கத்தால் போர் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு தப்பி ஓடினர். மருத்துவ வசதிகள் வழங்கபப்டுவது மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டதாகவும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவது தடுக்கப்பட்டதாகவும் ஆதாரஙக்ள் காட்டுகின்றன.

2011-இல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் ஐ.நா. 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்த புள்ளிவிவரத்தை நிராகரித்தது. அந்த அறிக்கை அடிப்படையில் குறைபாடுடையது என்று அறிவித்தது. புலிகளின் தோல்வியைத் தொடர்ந்து தப்பிய தமிழ் பொதுமக்கள் சுற்றி வளைக்கப்பட்டு முகாம்களில் வைக்கப்பட்டனர். விசாரணைக்கு பிடித்துச் செல்லப்பட்டவர்கள் மீண்டும் ஒருபோதும் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர்க் குற்றப் புகார்கள் எழுப்பப்பட்டன. ஆனால், இலங்கை முழுவதும், ராஜபக்சேக்கள் போரை முடிவுக்கு கொண்டுவந்ததற்காக பாராட்டப்பட்டனர்.

கோத்தபய ராஜபக்சே தனக்கும் இராணுவத்துக்கும் எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார். இருப்பினும், போரில் அவரது பங்கிற்கு அவர் பொறுப்பேற்கவில்லை என்பது போரின் வலியுடன் வாழும் தமிழர்களை கோபப்படுத்தியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close