சிறிய குற்றங்களுக்காக சிறையில் வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான கைதிகளை விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக சிறையில் கொடிய கலவரம் வெடித்த பின்னர், இலங்கை அரசு ஆயிரக்கணக்கானவர்களை விடுவிப்பதாகக் கூறியது.
இலங்கை நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி, ஞாயிற்றுக்கிழமை கலவரத்திற்குப் பிறகு மொத்தம் 607 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி உத்தரவின் ஒரு பகுதியாக, அதிகமான கைதிகளை விடுவிப்பதற்கும் அவர்களுக்கு எதிரான வழக்குகளை விரைவுபடுத்துவதற்கும் நாங்கள் வேறு வழிகளைப் பார்க்கிறோம் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் கூறினார்.
பலி எண்ணிக்கை உயர்வு
கொழும்பிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மஹாராவில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், இந்த மோதலில் 100க்கும் மேற்பட்ட கைதிகள் மற்றும் இரண்டு சிறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறைக் கலவரத்தில் ஆரம்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக இருந்தது. ஆனால், சில கைதிகள் வன்முறையில் படுகாயம் அடைந்ததால் பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது.
நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் சுகாதார வசதிகளைக் கோரியும் அவர்களுடைய வழக்கு விசாரணையை விரைவுபடுத்தக் கோரியும் குரல் கொடுத்ததைத் தொடர்ந்து மஹாராவில் கலவரம் வெடித்தது.
இலங்கை சிறைத்துறை ஆணையர் சந்தனா ஏகநாயகே முன்னதாக, ஒரு கைதிகள் குழு மருந்து சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் நுழைந்து மருந்துகளைத் திருடிச் சென்றதாகக் கூறினார்.
இலங்கையின் சிறைகள் வெடிக்கும் நிலையில் உள்ளன. இலங்கை சிறைகளில் 30,000 க்கும் மேற்பட்ட கைதிகளை வைத்திருக்கின்றனர். அவை கிட்டத்தட்ட மூன்று மடங்கு திறன் கொண்டவை. இலங்கை முழுவதும் சுமார் 1,200 கைதிகளுக்கு பரிசோதனையில் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil ”