/indian-express-tamil/media/media_files/2024/11/18/3PxRySvcUXebngRJKMjw.jpg)
இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அந்நாட்டு அதிபர் அனுரகுமார திசாநாயக்க பிறப்பித்துள்ளார்.
இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரியவை மீண்டும் நியமித்து, அந்நாட்டு அதிபர் அனுரகுமார திசநாயக்க உத்தரவிட்டுள்ளார். கடந்த வியாக்கிழமை நடந்த முடிந்த தேர்தலில், அவரது தலைமையிலான இடதுசாரிய தேசிய மக்கள் சக்தி கூட்டணி மொத்தமுள்ள 225 இடங்களில், 159 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Sri Lanka’s President Dissanayake appoints Harini Amarasuriya as PM after election win
மேலும் இன்று நடைபெற்ற பதவியேற்பின் போது, மூத்த உறுப்பினரான விஜிதா ஹேரத், வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். எனினும், புதிதாக நிதியமைச்சர் என யாரும் நியமிக்கப்படவில்லை. இந்த இலாகாவை அதிபரே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் குடும்ப அரசியல் முறையை திசநாயக்க தகர்த்ததாக கருதப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் ஹரிணி அமரசூரியவை பிரதமராக அவர் நியமித்தார். அந்த நேரத்தில் இடதுசாரிய தேசிய மக்கள் சக்தி கூட்டணியில் மூன்று நாடாளுமன்ற இடங்கள் மட்டுமே இருந்தன. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, உடனடி தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
தற்போது நடந்து முடிந்த தேர்தல், திசநாயக்கவின் அரசியல் முன்னெடுப்புகளை தொடர்வதற்கு சாதகமாக அமைந்துள்ளது. தற்போதுவரை இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் மூலம் அரசியல் ரீதியான உறுதித்தன்மை ஏற்படும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சுமார் 22 மில்லியன் மக்கள் வசிக்கும் இலங்கை, கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.