Advertisment

தமிழ் கைதிகளை கொன்றுவிடுவதாக மிரட்டிய இலங்கை அமைச்சர் ராஜினாமா

தன்னுடைய தனிப்பட்ட ஆயுதத்தையும் சிறைச்சாலைக்குள் எடுத்துச் சென்றுள்ளார். இது சட்டப்படி குற்றமாகும். இந்த நிகழ்வு குறித்தும், அமைச்சரின் செயல்பாடுகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் சபை தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
sri lanka, flag, sri lanka prison minister, world news

Sri Lankan prison minister resigns : இலங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றபோது தமிழ் கைதிகளை கொன்றுவிடுவதாக மிரட்டியதாக கூறப்பட்ட சிறைகளின் இலங்கை மேலாண்மைத்துறை இணை அமைச்சர் லோகன் ரத்வத்தே தன்னுடைய பதவியை புதன்கிழமை ராஜினாமா செய்தார். நடைபெற்ற சம்பவம் தொடர்பாக தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்ந்து செலுத்திய அழுத்தம் காரணமாக ரத்வத்தே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவை இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டதாக அதிபரின் செய்தி தொடர்பாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்தார்.

Advertisment

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு செப்டம்பர் மாதம் 12ம் தேதி அன்று சென்ற அமைச்சர் இரண்டு தமிழ் கைதிகளை மண்டியிட கூறியதாகவும், அவர்களை கொன்றுவிடுவதாகவும் மிரட்டியதாக கூறப்பட்டுள்ளது. அவரது செயல் தமிழ்க்கட்சிகளின் கண்டனத்தை பெற்றதோடு ராஜினாமாவிற்கான அழுத்தத்தை உருவாக்கியது.

செப்டம்பர் மாதம் 12ம் தேதி அன்று அநுராதபுரம் சிறைக்கு சென்று தமிழ் கைதிகளை மிரட்டிய சிறை மேலாண்மைத்துறை இணை அமைச்சரை உடனே பதவியில் இருந்து நீக வேண்டும் என்றும் அவரின் நடத்தை தொடர்பாக விசாரணை செய்து அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டணி ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கேலன் பொன்னம்பலமும் இந்த சம்பவத்தை உறுதி செய்தார். டி.என்.பி.எஃப்., ஞாயிற்றுக்கிழமை அன்று சிறை மேலாண்மைத்துறை இணை அமைச்சர் அநுராதபுரம் சென்றது மற்றும் தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிட கூறியது மற்றும் கொலை செய்வதாக மிரட்டியதையும் உறுதி செய்ய முடியும் என்று தன்னுடைய ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

அநுராதபுரம் செல்வதற்கு முன்பு, தன்னுடைய நண்பர்களுக்கு தூக்கு மேடையை காட்டுவதற்காக கொழும்புவில் உள்ள பிரதான சிறைச்சாலைக்கு அவர் சென்றதாக பத்திரிக்கைகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன.

தன்னுடைய தனிப்பட்ட ஆயுதத்தையும் சிறைச்சாலைக்குள் எடுத்துச் சென்றுள்ளார். இது சட்டப்படி குற்றமாகும். இந்த நிகழ்வு குறித்தும், அமைச்சரின் செயல்பாடுகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் சபை தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

இலங்கையின் ஐநா வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் கடமை என்று கூறியதாக கொழும்பு கஜெட்டீ செய்தி வெளியிட்டுள்ளது. சிறைச்சாலை சீர்திருத்தம் மற்றும் போதை மறுவாழ்வு குறித்த எங்களின் பணியில், ஐ.நா. இலங்கை சிறையில் உள்ள அனைவரின் உரிமைகளையும் நிலைநாட்டும் திறனை வலுப்படுத்த பணியாற்றி வருகிறது. கைதிகளை தவறாக வழிநடத்தியதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம் என்று ஹனா சிங்கர் ஹம்டீ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sri Lanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment