இலங்கை அமைச்சரும் மலையகத் தமிழர் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவு, இலங்கை மட்டுமல்லாது தமிழ் பேசும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையை சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவர் ஆறுமுகன் தொண்டமான். சௌம்யமூர்த்தி ஆறுமுகன் ராமநாதன் தொண்டமான் என்ற இவர் அங்கு 30 வருடங்களாக அரசியலில் இருந்து வந்தார்.
1964ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகன் தொண்டமான், கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார். 1990ஆம் ஆண்டு முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக செயற்பாட்டு அரசியலுக்குள் பிரவேசித்துள்ளார்.
1993ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராக கடமையாற்றிய அவர், 1994ஆம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார். அதேபோல் இவர் இலங்கையின் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக முன்னேற்ற அமைச்சர் ஆகவும் இருந்துள்ளார்.. இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதியான இவர் தமிழர்கள் இடையே அதிக பிரபலம் ஆனவர்.
1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்றப் பிரவேசத்தை பெற்ற அவர், தொடர்ச்சியாக நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று வந்தார். பல அமைச்சர் பதவிகளை வகித்த அவர், தற்போதைய அரசாங்கத்திலும் அமைச்சர் பதவியை வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் மூத்த அரசியல் தலைவர் மற்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மே 26ம் தேதி காலமானார்.
இந்திய தூதர் இரங்கல் : ஆறுமுகன் தொண்டமான் திடீர் மறைவுக்கு இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்கள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களை சந்தித்து சமூக அபிவிருத்திக்கான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார். இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கான பிரத்தியேக வீடமைப்புத்திட்டம் .......1/n #lka https://t.co/dYVHuHsypf
— India in Sri Lanka (@IndiainSL) May 26, 2020
தலைவர்கள் இரங்கல் : ஆறுமுகன் தொண்டைமானின் மறைவுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற எம்.பி.யுமான திருமாவளவன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/Og2tHaYeED
— சீமான் (@SeemanOfficial) May 26, 2020
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/Og2tHaYeED
— சீமான் (@SeemanOfficial) May 26, 2020
ஆறுமுகன் தொண்டமான் உடலுக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அஞ்சலி செலுத்திஉள்ளார் . ஆறுமுகன் தொண்டமானின் மறைவு அரசுக்கும் மக்களுக்கும் மலையக மக்களுக்கும் பேரிழப்பு. அவரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.