தமிழர்களை கொன்ற அதிகாரிக்கு பொது மன்னிப்பா?. இலங்கை அரசு மீது தமிழர் தேசிய கூட்டமைப்பு தாக்கு
இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போரில், அப்பாவி தமிழர்களை கொன்ற அதிகாரிக்கு அதிபர் பொதுமன்னிப்பு வழங்க முன்வந்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று தமிழர் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போரில், அப்பாவி தமிழர்களை கொன்ற அதிகாரிக்கு அதிபர் பொதுமன்னிப்பு வழங்க முன்வந்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று தமிழர் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Advertisment
இலங்கை நாட்டில் கடந்த 2000மாவது ஆண்டில் நடந்த உள்நாட்டுப்போரில் லட்சக்கணக்கான அப்பாவித்தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போரில், 5 வயது குழந்தை உள்ளிட்ட 8 தமிழர்களின் மரணத்திற்கு காரணமாக ராணுவ அதிகாரி சுனில் ரத்னநாயகேவிற்கு, அதிபர் கோத்தபய ராஜபக்ஷே பொதுமன்னிப்பு வழங்க முன்வந்திருப்பது கண்டிக்கத்தக்கது. அதிபர் இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்று தமிழர் தேசிய கூட்டமைப்பு கட்சி, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நமது அண்டை நாடான இலங்கையிலும், ஊரடங்கு உத்தரவு நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, மக்களின் இயல்புவாழ்க்கை அங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழர் தேசிய கூட்டமைப்பு கட்சி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையில் உள்நாட்டுப்போர் நடைபெற்ற சமயத்தில், மிருசுவில், யாழ்ப்பாணம் பகுதியில் நடைபெற்ற போரில், 5 வயது குழந்தை உள்ளிட்ட 8 அப்பாவி தமிழர்களின் மரணத்திற்கு காரணமாக இருந்தததாக ராணுவ அதிகாரி சுனில் ரத்னநாயகே மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம், குற்றத்தை உறுதி செய்த நிலையில் 2019ம் ஆண்டில் அவருக்கு மரண தண்டனையை தீர்ப்பாக அறிவித்திருந்தது. இதனிடையே, அவருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ஷே, பொதுமன்னிப்பு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவிற்கு தங்களது கட்சி கடும் கண்டனம் தெரிவிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil