Advertisment

இலங்கையில் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கம்: ரணிலின் திடீர் முடிவின் பின்னணி என்ன?

இலங்கையில் 6 வெளிநாடு வாழ் தமிழ் அமைப்புகள் மீதான தடையை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அரசு நீக்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு

உலக தமிழ் அமைப்பு, தமிழ் ஈழ மக்கள் பேரவை, உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு, ஆஸ்திரேலிய தமிழர் பேரவை, கனடா தமிழர் பேரவை, பிரிட்டீஷ் தமிழ் அமைப்பு உள்ளிட்ட 6 வெளிநாடுவாழ் தமிழ் அமைப்புகளுக்கான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது.

Advertisment

இலங்கையில் கடும் பொருளாதார நெடிக்கடி நீடித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றன. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மக்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன. கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதையடுத்து, அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவரும் பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

சீன உளவுக் கப்பல் வருகை

பொருளாதார நெடிக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவி வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பிலும் அரிசி, அத்தியாவசிய மருந்து பொருட்கள் அனுப்பபட்டு வருகிறது. இந்தநிலையில், சீனா உளவுக் கப்பல் இலங்கை வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா இதுகுறித்து இலங்கையிடம் முன்பே கவலை தெரிவித்திருந்தது.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் சீனக் கப்பல் தென்னிந்திய துறைமுகத்தை உளவு பார்க்கும் அச்சம் இருப்பதாக தெரிவித்தது.

தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கம்

இருப்பினும் நாளை (ஆகஸ்ட் 16) சீனக் கப்பல் யுவான் வாங் 5 இலங்கை வருகிறது. இதற்கு தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், இலங்கையில் 6 வெளிநாடு வாழ் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கம் ஆதாயம் தேடுவதற்கு என பலர் விமர்சனம் செய்துள்ளனர்.

இனப் பிரச்சினை காரணமாக இலங்கையை விட்டு பெருமளவில் வெளியேறிய தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்துவருகிறார்கள். அங்கு தமிழ் அமைப்புகள் தொடங்கப்பட்டு நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்திருந்தது.

அரசியல் விமர்சகர்கள் கருத்து

தற்போது அதிபர் விக்ரமசிங்கே அரசு 6 தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது. மேலும் 316 தனிநபர்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. முன்னதாக, பொருளாதார நெருக்கடியில் தடுமாறும் இலங்கைக்கு, வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்கள், சொந்த நாட்டின் அன்னியச் செலாவணி இருப்புக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.

தமிழ் அமைப்புக்கள் மற்றும் நபர்கள் மீதான தடை நீக்கம், ரணிலின் ஒரு தந்திர நடவடிக்கை என்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களின் உதவியை எதிர்பார்த்து தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment