Advertisment

இலங்கைக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி மருந்து: இந்தியா வழங்குகிறது

உலகத்தின் எந்த மூலைக்கும் கொரோனா தடுப்பு மருந்தை அனுப்ப இந்தியா தயாராக உள்ளது

author-image
WebDesk
New Update
இலங்கைக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி மருந்து: இந்தியா வழங்குகிறது

அடுத்த வாரம் கோவிட் -19 தடுப்பூசிகளை இந்தியாவில் இருந்து இலங்கை இலவசமாகப் பெறும் என்று இலங்கை  அதிபர் கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

Advertisment

முன்னதாக, அஸ்ட்ரா ஜெனிகா /ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்தது.

 

முன் கள சுகாதார ஊழியர்கள் , காவல் துறையினர் ராணுவத்தினர் மற்றும் ஆபத்தான தொற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அதிபர் தெரிவித்தார். நாட்டின்  மருத்துவ கட்டமைப்பு வீழ்ச்சியடையாமல் தடுக்க முன்கள சுகாதார ஊழியர்களுக்கு விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் என்றும் கூறினார் .

"ரஷ்யா மற்றும் சீனாவிலிருந்தும் கோவிட் -19 தடுப்பூசிகளையும் வாங்குவோம்" என்று ஜனாதிபதி கூறினார்.

நாடு முழுவதும் மூன்று கட்டங்களாக கொவிட்-19 தடுப்பூசி சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் இலங்கை அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த 16ஆம் தேதியன்று இந்தியாவில்  கொவிட்-19 தடுப்பூசி  வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டதற்கு இலங்கை அதிபர், இலங்கை பிரதமர் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ஷ  தனது  ட்விட்டரில், ‘‘கொவிட்-19 தடுப்பூசி வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும் மற்றும் நட்பு அண்டை நாடுகளுடனான அவரது தாராள மனப்பான்மைக்கும் என் இதயப்பூர்வமான வாழ்த்துகள்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே தனது ட்விட்டர் செய்தியில், ‘‘இந்த மிகப் பெரிய கொவிட் தடுப்பூசித் திட்டம் என்ற முக்கியமான நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும், இந்திய அரசுக்கும் வாழ்த்துகள். இந்த பேரழிவுத் தொற்று முடிவின் தொடக்கத்தை நாம் பார்க்கத் தொடங்கியுள்ளோம்.’’ என கூறினார்.

 

இந்த வாரம் முதல் இலங்கை, பூட்டான், மாலத்தீவு, பங்களாதேஷ், நேபாளம், மியான்மர்,சீஷெல்ஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் மொரீஷியஸ் ஆகிய ஏழு நாடுகளுக்கு மானிய உதவியின் கீழ் கோவிட் -19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று இந்தியா முன்னதாக அறிவித்தது.

'அண்டை நாடு முதலில்’ என்ற அரசின் முக்கிய கொள்கையின் கீழ்  நேபாளம், பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவு ஆகிய நாடுகள் ஏற்கனவே மானிய உதவியின் கீழ்  இந்தியாவிடம் இருந்து கோவிட்-19 தடுப்பூசிகளை இலவசமாக பெற்றுள்ளன.

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகாவின் கோவிஷீல்ட் மருந்தை சீரம் ஆய்வு மையம் தயாரித்து வருகிறது. கோவாக்சின் தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் தயாரிக்கிறது.

உலகத்தின் எந்த மூலைக்கும் கொரோனா தடுப்பு மருந்தை அனுப்ப இந்தியா தயாராக உள்ளது. சேர்த்து வைத்துக் கொள்வதை விட மற்றவர்களுக்கு வழங்குவதில் தான் அதிக மகிழ்ச்சி உள்ளது. எவ்வளவு கொடுக்கிறோம் என்பதற்கு எல்லையே இல்லை என்று மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

புனேவில் உள்ள கேம்ப் ஏரியா பகுதியில் டாக்டர் சைரஸ் பூனாவாலா உயர்நிலைப் பள்ளி மற்றும் டாக்டர் சைரஸ் பூனாவாலா திறன் மேம்பாட்டு மையத்தின் பெயர் வைக்கும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை,  அஸ்ட்ரா ஜெனிகா /ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்தது.

 

 

இலங்கையில்  கொரோனா பாதிப்புகள் 50, 000 ஐக் கடந்த நிலையில், உயிரிழப்புகள் எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, இலங்கை சுகாதாரத் துறை அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் மருத்துவ பயிற்சியாளர் தயாரித்த கொரோனா தடுப்பு பாணியை ஆதரித்தற்காக கடும் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Covid 19 Vaccine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment