பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்

இந்த நூற்றாண்டின் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் ஸ்டீபன் ஹாக்கிங் பலராலும் புகழப்பட்டார்

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான  ஸ்டீபன் ஹாக்கிங் உடல்நலக்குறைவால் இன்று (14.3.18) காலமானார்.

76 வது வயதான  ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு செய்தியை அவரின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். லண்டன் கேம்பிரிட்ஜ் இல்லத்தில் அவர் மரணமடைந்துள்ளார். நரம்பியல் நோயால் நீண்ட காலமாக உடல் நலம் குன்றியிருந்த அவர் குவாண்டம் கோட்பாடு, அண்டவியல், கருந்துளை குறித்த ஆராய்ச்சிகளை செய்து வந்தார்.

இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் ஜனவரி 8, 1942ம் ஆண்டு பிறந்த ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் சிறு வயதில் இருந்தெ இயற்பியல் துறையில் அதிக ஈடுபாடு காட்டினர். அவரின் தந்தையும் ஒரு இயற்பியலாளர்.

ஸ்டீபன் னது 21 வயதிலேயே அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis), என்னும் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டார்.இதனால் இவரின் கை ,கால்கள் முடிங்கின. மேலும், பேச்சையும் இழந்த ஸ்டீபன் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்து கொண்டு, அதன் மூலம்  தனது செயல்களை செய்தார்.

இவர் எழுதிய “தி பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்” என்ற  புத்தகம் அதிக அளவு விற்பனையான புத்தகங்களில் ஒன்று என்ற சாதனையைப் படைத்தது.அவரது தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்  மதிநுட்பமும் ஹாஸ்ய உணர்வும் உலகில் பலரை பிரமிக்க வைத்தது. 

கருந்துளை (black holes) குறித்த ஆய்வில் ஸ்டீபனின் பங்களிப்பு இன்றியமையாதது முக்கியமானது.பன்மடங்கு தன்னம்பிக்கையுடன் இத்தனை வருடங்கள் தொடர்ந்து ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வந்த அவர்,  கணிதவியல் நிபுணராகவும் திகழ்ந்தார். அண்டவெளியின் தோற்றத்தையும், அதன் பரிணாம வளர்ச்சியையும் பற்றி ஆராய்ந்து மகத்தான கண்டுபிடிப்புகளை வெளியிட்டு உலகின் தலைச்சிறந்த விஞ்ஞானி என்ற பெயரையும் பெற்றார்.

இந்த நூற்றாண்டின் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் என்று   ஸ்டீபன் ஹாக்கிங் பலராலும்  புகழப்பட்டார்.  மண்ணுலகை விட்டு அவர் பிரிந்தாலும்,  அவரின் பெயரும் புகழும் காலம் கடந்து நிற்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close