Stop vaccine nationalism, encourage internationalism: India at UNSC : இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவிட்19 தடுப்பூசிகளை 25 நாடுகளுக்கு அனுப்பியுள்ளது இந்தியா. புதன்கிழமை அன்று சர்வதேச சமூகத்திடம் தடுப்பூசி தேசியவாதத்தை நிறுத்த வேண்டும் என்றும் உலக அளவில் தடுப்பூசிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், அளவுக்கு மீறிய தடுப்பூசிகளின் பதுக்கல்கள், கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக கூட்டு சுகாதார பாதுகாப்பை பெற உலகநாடுகள் மேற்கொண்டுள்ள முடிவுகள் தோற்கடிக்கப்படும் என்று இந்தியா கூறியுள்ளது.
ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் சர்வதேச சமூகத்திற்கு 9 முக்கிய விசயங்களை வலியுறுத்தினார். தடுப்பூசி தேசியவாதத்தை நிறுத்துங்கள்; உண்மையில், சர்வதேசவாதத்தை தீவிரமாக ஊக்குவிக்கவும். மிதமிஞ்சிய அளவுகளை பதுக்கி வைப்பது கூட்டு சுகாதார பாதுகாப்பை அடைவதற்கான நம்முடைய முயற்சிகளை தோற்கடிக்கும்என்று அவர் கூறினார். கோவிட்19 நோய் தொற்றின் பின்னணியில் implementation of resolution 2532 (2020) குறித்து பேசுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.
கொரோனா நோய் தொற்று காலத்தை பயன்படுத்தி தவறான கருத்துகளை பிரச்சாரங்கள் மூலமாக கொண்டு சென்று அவர்களின் நோக்கங்களையும் செயல்முறைகளையும் முன்னேற்றி செல்ல முயற்சிக்கின்றனர். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
தடுப்பூசி விநியோகம் தொடர்பாக உலகளாவிய ஒருங்கிணைப்பு இல்லாதது மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், ஏழை நாடுகளையும் மிக மோசமாக பாதிக்கக் கூடும் என்று அவர் கூறினார். ”செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச கமிட்டி, இது போன்ற சூழலில் 60 மில்லியன் மக்கள் வசித்து வருவதாக கூறியுள்ளது” என்று கூறினார்.
உலகளவில் தடுப்பூசிகளை அணுகுவதில் ஒரு வெளிப்படையான ஏற்றத்தாழ்வு குறித்து இந்தியாவும் அக்கறை கொண்டுள்ளது மற்றும் தொற்றுநோயின் தாக்கத்தை தணிக்க தடுப்பூசிகளை அணுகுவதில் சமத்துவம் முக்கியமானது என்றார் ஜெய்ஷங்கர். லகின் ஏழ்மையான நாடுகளுக்கு போதுமான தடுப்பூசி அளவைப் பெற முயற்சிக்கிறது கோவாக்ஸின் கட்டமைப்பு என்றும் அவர் தெரிவித்தார். அனைத்து நாடுகளுக்கும் நியாயமான மற்றும் சமமான முறையில் தடுப்பூசிகளை சமமாக விநியோகிப்பதை உறுதி செய்வதற்காக கோவாக்ஸ் வசதியை வலுப்படுத்த அவர் மேலும் அழைப்பு விடுத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil