காற்றில் 20 நிமிடங்களுக்குள் 90% தொற்று திறன் குறையும் கோவிட்; ஆய்வில் கண்டிபிடிப்பு

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஏரோசால் ஆராய்ச்சி மையத்தால் வெளியிடப்பட்ட ஆய்வின் கண்டுபிடிப்புகள், கோவிட்-19 பரவுவதைத் தடுக்க முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் காற்றில் பரவிய 20 நிமிடங்களுக்குள் 90 சதவிகிதம் குறைவான தொற்று திறன் கொண்ட தொற்றாக மாறும், முதல் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அதன் தொற்று திறனை இழக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு காற்றில் வெளியேறிய கொடிய தொற்று எவ்வாறு உயிர்வாழ்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளது.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஏரோசால் ஆராய்ச்சி மையத்தால் வெளியிடப்பட்ட ஆய்வின் கண்டுபிடிப்புகள், கோவிட் -19 பரவுவதைத் தடுக்க முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இன்னும் மதிப்பீடு செய்யப்படாத இந்த ஆய்வு, கொரோனா வைரஸ் வெளியேறிய பிறகு காற்றில் எவ்வாறு சரியாகப் பயணிக்கிறது என்பதை உருவகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும் என்று தி கார்டியன் இணையதளம் தெரிவித்துள்ளது.

“மோசமான காற்றோட்டம் உள்ள இடங்களில் மக்கள் குவியும்போது வைரஸ் பல மீட்டர்கள் அல்லது ஒரு அறை முழுவதும் காற்றில் பரவுவது பற்றி சிந்திக்கிறார்கள். அப்படி நடக்காது என்று நான் கூறவில்லை. ஆனால், நீங்கள் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும்போது வெளிப்படும் மிகப்பெரிய ஆபத்து இன்னும் அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று ஆய்வின் முதன்மை ஆசிரியர் பேராசிரியர் ஜோனாதன் ரீட் தி கார்டியனிடம் கூறினார்.

வைரஸ் காற்றில் பரவும் போது என்ன நடக்கும் என்பதைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் வைரஸ் கொண்ட துகள்களை உருவாக்க ஒரு கருவியை உருவாக்கி, இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் ஐந்து வினாடிகள் முதல் 20 நிமிடங்கள் வரை அங்கே இரண்டு மின்சார வளையங்களுக்கு இடையில் மிதக்க அனுமதித்தனர்.

இந்த ஆய்வின் படி, வைரஸ் துகள்கள் நுரையீரலை விட்டு வெளியேறும்போது, ​​அவை விரைவாக தண்ணீரை இழக்கின்றன மற்றும் சுற்றுச்சூழலில் குறைந்த அளவு கார்பன் டை ஆக்சைடு pH இல் விரைவான அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. இது மனித உயிரணுக்களை பாதிக்கும் வைரஸின் திறனை பாதிக்கிறது என்று தி கார்டியன் தெரிவித்துள்ளது.

ஒரு பொதுவான அலுவலக சூழலில், சுற்றியுள்ள பகுதியின் ஈரப்பதம் பொதுவாக 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும், அதில் இந்த வைரஸ் ஐந்து வினாடிகளுக்குள் பாதி அளவு தொற்று திறன் குறைந்தது. அதன் பிறகு தொற்று திறன் இழப்பு மெதுவாகவும் படிப்படியாகவும் இழந்தது.

இதற்கிடையில், உதாரணமாக, அதிக ஈரப்பதமான சூழலில், ஒரு நீராவி அறை அல்லது ஷவர் அறையில் வைரஸின் சரிவு கணிசமாக மெதுவாக உள்ளது. இருப்பினும், வெப்பமான சூழ்நிலையில் நோய் வேகமாக பரவுகிறது என்ற நம்பிக்கைக்கு மாறாக, வைரஸ் தொற்றில் வெப்பமான சூழ்நிலை சிறிய வித்தியாசத்தை ஏற்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Study finds covid becomes 90 per cent less infectious within 20 minutes in air

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com