கென்யாவில் நோயாளியை மாற்றி வேறொருவர் தலையை பிளந்து மூளையில் அறுவை சிகிச்சை செய்த 4 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாட்டா மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் நடைபெற்றது. அதில், 5ஏ வார்டில் இருவர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு மூளையில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும். மற்றொருவருக்கு மூளையில் ஏற்பட்டுள்ள ரத்த உறைவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
இந்நிலையில், இருவருக்கும் மயக்க மருந்து அளிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த வார்டுக்கு வந்த மருத்துவர்கள் குழு, பெயரை மட்டும் பார்த்துவிட்டு ஆப்பரேஷனை தொடங்கினர். தலையை பிளந்து மூளையில் உள்ள கட்டியை தேடினர்.
இரண்டு மணி நேரமாக இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டு கட்டியை தேடியிருக்கின்றனர். இந்நிலையில், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொருவர், “எனக்கு ஆப்பரேஷன்னு சொன்னீங்களே, என்னாச்சு?”, என கேட்டபடி வந்திருக்கிறார்.
அப்போதுதான், வேறொருவரின் தலையை பிளந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கிறோம் என்பது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபர் உயிர் பிழைத்தார்.
இதையடுத்து, 4 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.