Reuters
Taliban co-founder Mullah Baradar : தாலிபானின் இணை நிறுவனர் முல்லா பராதர் விரைவில் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை அறிவிப்பார் என்று இஸ்லாமியக் குழுவின் வட்டாரங்கள் தெரிவித்தன. வெள்ளிக்கிழமை அன்று தாலிபான் படையினர், ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட குடியரசு கட்சியின் ராணுவ வீரர்களுடன் காபூலுக்கு வடக்கே அமைந்துள்ள பஞ்சஸிர் பள்ளத்தாக்கில் சண்டையில் ஈடுபட்டனர்.
வறட்சி மற்றும் பல்வேறு சமயங்களில் 2,40,000 ஆப்கானியர்களை கொன்று குவித்த கலவரங்களால் சீர் குலைந்திருக்கும் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை மீட்பது அரசின் உடனடி முன்னுரிமையாக இருக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானின் அரசியல் அலுவல்களை தலைமை தாங்கி வரும் பராதர், தாலின்பானின் துணை நிறுவர் முல்லா ஒமரின் மகன் முல்லா முகமது யக்கூப் மற்றும் ஷேர் முமகது அப்பாஸ் ஸ்டனெக்ஸாய் ஆகியோருடன் இணைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தை அறிவிப்பதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் நடைபெற்று வருகின்ற நிலையில் அனைத்து முக்கிய தாலிபான் தலைவர்களும் காபூல் விரைந்துள்ளனர் என்று தாலிபான் அதிகாரி ரெய்ட்டர்ஸிடம் அறிவித்தார்.
தாலிபான்களின் முக்கியமான மதத்தலைவர் ஹைபத்துல்லா அகுன்சடா இஸ்லாமிய கட்டமைப்பிற்குள் மத விஷயங்கள் மற்றும் நிர்வாகத்தில் கவனம் செலுத்துவார் என்று மற்றொரு தாலிபான் தலைவர் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 15ம் தேதி அன்று காபூலை கைப்பற்றிய தாலிபான்கள் நாட்டை மொத்தமாக தங்களின் கைகளுக்குள் கொண்டு வர துவங்கியுள்ளனர். ஆனால் பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் கடுமையான எதிர்ப்பு நிலவியதை தொடர்ந்து அங்கு மோசமான சண்டை நடைபெற்று வருகிறது. அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் முஜாஹிதீன் தளபதி அஹ்மத் ஷா மசூத்தின் மகன் அஹ்மத் மசூத் தலைமையில் பல ஆயிரம் பிராந்திய போராளிகள் மற்றும் அரசாங்கத்தின் ஆயுதப்படைகளின் ராணுவ வீரர்கள் அந்த பள்ளத்தாக்கின் கரடு முரடான பகுதிகளில் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டதாக தோன்றுகிறது. தோல்விக்கு ஒவ்வொரு தரப்பும் மற்றவர்களை குற்றம் சுமத்தி வருகின்றனர்.
தாலிபான்கள் ஒருமித்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தங்கள் விருப்பத்தைப் பற்றி பேசினாலும், தீவிரவாத இயக்கத்திற்கு நெருக்கமான ஒரு வட்டாரம், இப்போது உருவாகும் இடைக்கால அரசாங்கம் தாலிபன் உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கும் என்று கூறியது.
25 துறைகளை உள்ளடக்கிய அமைச்சகம் உருவாக்கப்படும் என்றும் அதில் 12 முஸ்லீம் அறிஞர்களின் ஆலோசனைக் குழுவும் இடம் பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு முதல் 8 மாதங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஒது லோயா ஜிர்கா என்று அழைக்கப்படுகிறது. , ஆப்கானிஸ்தான் சமுதாயத்தில் உள்ள பெரியவர்கள் மற்றும் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து ஒரு அரசியலமைப்பு மற்றும் எதிர்கால அரசாங்கத்தின் அமைப்பு பற்றி இது விவாதிக்கும்.
அனைத்து ஆதாரங்களும் இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை விரைவில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கின்றன. ஆனால் அது எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பதில் வெவ்வேறு விதமான கருத்துகள் நிலவி வருகிறது. சிலர் வெள்ளிக்கிழமை என்று கூறினார்கள். சிலர், அடுத்த வாரத்தின் மையப்பகுதியில் என்று தெரிவித்தனர்.
சர்வதேச நன்கொடையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பார்வையில் அரசாங்கத்தின் நியாயத்தன்மை முக்கியமானதாக இருக்கும். வரவிருக்கும் பேரழிவு மற்றும் மில்லியன் டாலர்கள் மதிப்பிலான வெளிநாட்டு உதவியை நம்பியிருக்கும் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் தருவாயில் இருப்பது குறித்தும் மனிதாபிமான குழுக்கள் எச்சரித்துள்ளன .
தாலிபான்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பல ஆப்கானியர்கள் கடுமையான வறட்சிக்கு மத்தியில் தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க போராடினர் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் இப்போது பட்டினியை எதிர்கொள்ள நேரிடும் என்று உதவி நிறுவனங்கள் கூறுகின்றன.
இந்த நாட்டிற்கு வர இருக்கும் பொருளாதார நெருக்கடி விரிவடைவதையும், பெரிதாகுவதையும் ஆகஸ்ட் 15ம் தேதியில் இருந்து நாங்கள் பார்த்து வருகின்றோம் என்று ஆப்கானிஸ்தானில் அமைந்திருக்கும் உலக உணவு திட்டத்தின் இயக்குநர் மேரி எல்லென் மெக்க்ரோஆர்டி தெரிவித்தார்.
ஆப்கானிய தங்கம், முதலீடு மற்றும் வெளிநாட்டு நாணய இருப்பு ஆகியவற்றில் இருக்கும் பில்லியன் கணக்கான முதலீட்டை வெளியிடுவது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்திடம் எந்த திட்டமும் இல்லை. தாலிபான்கள் நாட்டை கைப்பற்றிய போது அமெரிக்க நிதி அனைத்தையும் முடக்கியுள்ளது.
ஒரு நேர்மறையான வளர்ச்சியில், வெஸ்டர்ன் யூனியன் கோ (WU.N) இன் மூத்த நிர்வாகி ஒருவர் மனிதாபிமானப் பணிகளைத் தொடர அமெரிக்காவின் உந்துதலுக்கு ஏற்ப ஆப்கானிஸ்தானுக்கு பணம் அனுப்பும் சேவையை மீண்டும் தொடங்குவதாகக் கூறினார்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் 96 முதல் 2001ம் ஆண்டு வரை ஆட்சி செய்த போது தீவிரமான ஷரியா சட்டங்களை அமல்படுத்தினர்.
ஆனால் இம்முறை மிகவும் தீவிரதன்மையற்றதாக நடந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளது. மனித உரிமை செயல்பாட்டாளர்களை பாதுகாப்பதாகவும் பழைய எதிரிகளை பழிவாங்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர் தாலிபான்கள். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இதர அமைப்புகள் இத்தகைய உத்தரவாதங்கள் மீது சந்தேகங்களை கொண்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil