தாடியை ஷேவ், ட்ரிம் செய்ய தடை: சலூன்களுக்கு தாலிபான் உத்தரவு

தெற்கு ஆப்கானிஸ்தான் மாகாணத்தில் முடிதிருத்தும் கடைகளில் தாடியை வெட்டவோ, ட்ரிம் செய்யவோ கூடாது என சலூன் கடைக்காரர்களுக்கு தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபின் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

தலிபான்களின் இஸ்லாமிய ஒழுங்குமுறை துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “சலூன் கடைக்காரர்கள், முடிதிருத்துவோர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஹெல்மாண்ட் மாகாணத்தின் தலைநகர் லஷ்கர் ஹா நகரில் ஆலோசனை நடத்தினோம். அந்தக் கூட்டத்தின் முடிவில் ஆண்கள் வைத்திருக்கும் தாடியை மழிக்கக் கூடாது. அவர்களின் தாடியை ட்ரிம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. சலூன்களில் மேற்கத்தியப் பாடல்கள், மேற்கத்திய இசை போன்றவற்றையும் ஒலிக்கவிடக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது.

லஷ்கர் காவில் வசிக்கும் பிலால் அஹ்மத் கூறுகையில், “தாடியை வெட்டுவதற்கான தடை பற்றி கேள்விப்பட்டு மனம் உடைந்தேன். இந்த நகரம் எல்லோருக்கும் பொதுவானது. அவரவர் வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்கள். மக்கள் விரும்பியதைச் செய்ய வேண்டும்” என்றார்.

ஆப்கானிஸ்தானின் முந்தைய ஆட்சியின் போது, ​​தாலிபான்கள் இஸ்லாத்தின் கடுமையான விதிகளை கடைபிடித்தனர். ஆகஸ்ட் 15ஆம் தேதி தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதிலிருந்து, 1990 களின் பிற்பகுதியில் அவர்கள் பின்பற்றிய கடுமையான விதிகளை மீண்டும் கொண்டு வருவார்களா என பல நாடுகளும் கவனித்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி நான்கு பேரைச் சுட்டுக் கொலை செய்த தாலிபான்கள் அவர்களின் சடலங்களை மேற்கு நகரமான ஹெராத்தில் பொதுவெளியில் தொங்கவிட்டனர்.

யாராவது விதியை மீறினால் தண்டிக்கப்படுவார்கள் என்றும் இதுகுறித்து புகார் செய்ய யாருக்கும் உரிமை இல்லை என முடிதிருத்தும் நபர்களுக்கு வழங்கப்பட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடி திருத்துபவர்கள் ஷேவிங் அல்லது டிரிம்மிங் விதிகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் என்ன தண்டனைகள் வழங்கப்படும் என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

தாலிபான்களின் முந்தைய ஆட்சியின் போது, ​​பழமைவாத இஸ்லாமியர்கள் ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும் என்று கோரினர். 2001 ல் அமெரிக்க தலைமையிலான படையெடுப்பைத் தொடர்ந்து ஆப்கான் அதிகாரத்திலிருந்து தாலிபான்கள் வெளியேற்றப்பட்ட பிறகு தாடியை ஷேவ் செய்வது, டிரிம் செய்வது நாட்டில் பிரபலமாகிவிட்டது.

லஷ்கர் காவில் உள்ள முடிதிருத்தும் கடை உரிமையாளர் ஷேர் அப்சல் இந்த உத்தரவு அடிமட்டத்தில் உள்ளவர்களை காயப்படுத்துகிறது என்றார். “முடி வெட்டுவதற்கு யாராவது வந்தால், அவர்கள் 40 முதல் 45 நாட்களுக்குப் பிறகு எங்களிடம் வருவார்கள், எனவே இது மற்ற வணிகங்களைப் போலவே எங்கள் வணிகத்தையும் பாதிக்கிறது,” என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Taliban issue no shave order to barbers in afghan province

Next Story
மருத்துவத்துறை ஒப்புதலுக்கு பிறகு கோவிட்19 பூஸ்டர் ஷாட்டை பெற்றுக் கொண்ட ஜோ பைடன்Joe biden, booster shot, Joe Biden gets COVID-19 booster
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com