scorecardresearch

இங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்

G7 Conference : இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் அழைப்பு விடுத்ததன் பேரில் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) லண்டன் புறப்பட்டு சென்றார்

ஜி7 மாநாட்டிற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் இங்கிலாந்து சென்ற குழு உறுப்பினர்கள் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால்  இதனால் தனது நிகழ்ச்சி குறித்து அட்டவனை மாற்றும்படி கூறியதாகவும், குழுவில் உள்ளவர்களுக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டது நேற்று மாலை தான் அறிந்துகொண்டதாகவும் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஆனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும், மற்றவர்களைக் கருத்தில் கொள்ளாமல், முன்னெச்சரிக்க்கை நடவடிக்கைகளுடன், எனது பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். இன்று இன்று நடைபெறும் ஜி 7 மாநாடும் அப்படித்தான் இருக்கும், எனவும் கூறியுள்ளார்.

ஜி 7 வெளியுறவு மற்றும் மேம்பாட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் அழைப்பு விடுத்ததன் பேரில் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) லண்டன் புறப்பட்டு சென்றார். “ஆஸ்திரேலியா, இந்தியா, கொரியா குடியரசு, தென்னாப்பிரிக்கா ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) ஆகிய நாடுகளுக்கிடையே ஜி 7 க்கான இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது” என்று டொமினிக் ராப் கூறியுள்ளார்.

இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உச்சிமாநாட்டிற்கு முன் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கூட்டத்திற்கு வந்த மற்ற விருந்தினர் நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிரந்தார். ஆனால் கென்டில் உள்ள செவெனிங்கில் ராப் உடன் திட்டமிடப்பட்ட இருதரப்பு சந்திப்பு ஒரு மெய்நிகர் வடிவத்தை எடுக்க வேண்டியிருக்கும் என்பதால், இது தொடர்பாக  கருத்து தெரிவிக்க வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (எஃப்.சி.டி.ஓ) அணுகப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரிதி படேலை சந்தித்து புதிய இடம்பெயர்வு மற்றும் கூட்டு இயக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் சட்ட பயணத்தை எளிதாக்கும் மற்றும் திறமை அடிப்படையிலான பணிகளை ஊக்குவிக்கும், ”என்று அவர் கூட்டத்திற்குப் பிறகு தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையின் உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் ஃபோன்டெல்லஸுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, இந்த பேச்சுவார்த்தையில், இந்தியாவின் கொரோனாவின் தாக்கம் நீடித்து வரும் இந்த முக்கியமான நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவிற்கு நீட்டித்த “ஆதரவு அளித்து வரும் நல்லெண்ணத்திற்கு” நன்றி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து முதல் இந்தியா-பிரான்ஸ்-ஆஸ்திரேலியா முத்தரப்பு மந்திரி பேச்சுவார்த்தையிலும் அவர் பங்கேற்றார். மேலும் கோவிட் தொற்றுநோய், பொருளாதார மீட்பு மற்றும் காமன்வெல்த் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதில் ஒன்றிணைந்து செயல்படுவதை மையமாகக் கொண்டு தென்னாப்பிரிக்க வெளியுறவு மந்திரி டாக்டர் நாலேடி பாண்டருடன் ஜெய்சங்கர் கலந்துரையாடினார்.

நேற்று முன்தினம் இங்கிலாந்து சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கனுடன் உலகளாவிய தொற்றுநோய் சவால், தடுப்பூசி உற்பத்தி திறன் மற்றும் நம்பகமான விநியோகச் சங்கிலிகள் பற்றிய விரிவான விவாதங்களை மையப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கொரோனா தொற்று பாதிப்புக்கு பின், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (ஐரோப்பிய ஒன்றியம்) ஆகியவற்றை உள்ளடக்கிய ஏழு அமைச்சர்கள் குழுவிற்கு ஜி 7 உச்சிமாநாடு நடப்பது இதுவே முதல்முறையாகும். மேலும் கொரோனா தொற்று காரணமாக இந்த மாநாடு பாதுகாப்பான இடத்தில் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.,

இந்த மாநாடு நடைபெற்ற இடத்தில், நுழைவதற்கு முன்பு முன் கொரோனா பரிசோதனை முடிக்க தேவையான பணியாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தது. மேலும் ஆன்-சைட் சோதனை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம், ஒரு மணி நேரத்திற்கு 50 பிரதிநிதிகள் வரை சோதிக்க முடியும். மேலும் ஜி 7 பிராண்டட் பாட்டில்களில் 35 லிட்டருக்கும் அதிகமான கை சுத்திகரிப்பு இயந்திரம் வளாகத்திற்கு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர, முழு உச்சிமாநாட்டிற்கும் சமூக இடைவெளி குறித்து கடுமையான வழிகாட்டுதல் மற்றும் கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு மதிய உணவுகள் / இரவு உணவுகளின் போது பெரும்பாலும் கடுமையான சோதனைகளை கடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Tamil news members in jaishankars delegation to uk test covid positive