News In Tamil : தேர்தலில் வென்ற ஜோ பைடனை அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கு ஜோ பைடன், ஒபாமா, போரீஸ் ஜான்சன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆதரவாளர்கள் மூலம் டொனால்ட் ட்ரம்ப் வன்முறையைத் தூண்டி விட்டதாகத் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என டொனால்ட் ட்ரம்ப், மைக் பென்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், சட்டத்தை மதித்து சட்டரீதியாகப் போராடுவோம் என ஆதரவாளர்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் அறிவுரை கூறியுள்ளார்.
பறவைக்காய்ச்சல் தாக்கத்தால் நாமக்கல் பண்ணைகளில் முட்டை விலை 25 காசு குறைந்து ரூ.4.85 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜனவரி 11-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ.86.96-க்கும், டீசல் 26 காசுகள் அதிகரித்து ரூ.79.72-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
Tamil News Updates : அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையில் எங்களுடன் இணைந்திருங்கள்.
தமிழகத்தில் இன்று புதிதாக 805 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பால் மாநிலத்தில் இன்று 12 பேர் உயிரிழந்தனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து 911 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 8,23,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுள்ளனர். இதில் 8,04,239 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 12,200 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஜனவரி 3ம் தேதி நடைபெற்ற குரூப் 1 தேர்வின் தற்காலிக விடைக் குறிப்புகளை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணையத்தில் தேர்வர்கள், பதிவு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதி, போன்றவற்றை உள்ளீடு செய்து விடைக் குறிப்பை தெரிந்துகொள்ளலாம்.
பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்த பெற்றோர்கள் தெரிவித்த கருத்துகளை பள்ளிக்கல்வித்துறை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளது. பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க 95% பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 18ல் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “மு.க.அழகிரி என்னுடைய நண்பர். அவரை நன்றாக எனக்கு தெரியும். என் மீது தனி அன்புகொண்டவர். முக அழகிரி தனியாக கூட்டம் சேர்ப்பதால் திமுகவுக்கு எந்தவிதம் பின்னடைவும் இல்லை. அவரது அறிக்கையால் கூட்டணிக்கு எந்தவித பாதிப்பு இருக்காது.” என்று தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா ஜனவரி 27ம் தேதி விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக வருமான வரி வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. சசிகலா விடுதலையாக உள்ளதால் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என சசிகலா தரப்பு ஐகோர்ட்டில் கோரியுள்ளது.
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கலைஞர் சூழ்ச்சி செய்தார் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். 21 உயிர்களை கொடுத்து போராடிய வன்னியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 20% இட ஒதுக்கீட்டை 107 சாதிகளுக்கு கலைஞர் அள்ளிக்கொடுத்தார் என்றும் நல்ல கனி என்று அழுகிய கனியைக் கொடுத்து ஏமாற்றினார் என்றும் கூறியுள்ளார்.
100 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்ற அறிவிப்பு பேரிடர் விதிக்கு எதிரானது என்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ், ஆனந்தி அமர்வில் நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிசிசிஐ தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கங்குலி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு கங்குலி நன்றியும் தெரிவித்திருக்கிறார்.
"வாஷிங்டன் டி.சி.யில் கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்திகளைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளானேன். ஒழுங்கான மற்றும் அமைதியான அதிகார பரிமாற்றம் தொடர வேண்டும். சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது" என்று அமெரிக்க வன்முறை குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
Distressed to see news about rioting and violence in Washington DC. Orderly and peaceful transfer of power must continue. The democratic process cannot be allowed to be subverted through unlawful protests.
— Narendra Modi (@narendramodi) January 7, 2021
அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் புகுந்த ட்ரம்ப்பின் ஆதரவாளர்களை வெளியேற்றத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்தக் கலவரத்தின்போது குண்டுபாய்ந்த பெண் உயிரிழந்துள்ளார். அங்கு நிலைமை மிகவும் மோசமானதால் வாஷிங்டனில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
"ஜனநாயகம் உடையக்கூடியது என்பதை இன்று மறுமுறை நினைவுகூர்ந்துள்ளது வேதனையளிக்கிறது. அதனை பாதுகாக்க நல்ல விருப்பமுள்ள மக்கள், எந்த நேரத்திலும் அதிகாரத்தையும் தனிப்பட்ட நலனையும் பின்தொடர்வதற்கு அர்ப்பணிக்காத எழுந்து நிற்க தைரியம் கொண்ட தலைவர்கள் தேவை" என ஜோ பைடன் ட்வீட் செய்துள்ளார்.
Today is a reminder, a painful one, that democracy is fragile. To preserve it requires people of good will, leaders with the courage to stand up, who are devoted not to pursuit of power and personal interest at any cost, but to the common good.
— Joe Biden (@JoeBiden) January 7, 2021
"போர் மற்றும் மோதல்கள் மூலம், அமெரிக்கா மிகவும் சகித்துக்கொண்டது. நாம் இங்கே சகித்துக்கொள்வோம், இப்போது வெற்றி பெறுவோம்" என அமெரிக்காவில் நடந்துவரும் வன்முறையை தொடர்ந்து ஜோ பைடன் ட்வீட் செய்துள்ளார்.
Through war and strife, America has endured much. And we will endure here and prevail now. pic.twitter.com/OvNOV0ogWG
— Joe Biden (@JoeBiden) January 6, 2021
2019-20 நிதியாண்டில், தேர்தல் செலவுகளுக்காக அதிமுக பெற்ற ரூ.52 கோடியில், 46 கோடி டாடா நிறுவனத்தின் புரோகிரசிவ் தேர்தல் அறக்கட்டளை மூலமாகவும், 5 கோடியே 38 லட்சம் ரூபாயை ஐ.டி.சி. நிறுவனம் மூலமாகவும் பெற்றது. தேர்தல் செல்வவீனங்களுக்காக திமுக பெற்ற 48 கோடியே 30 லட்ச ரூபாயில், 45 கோடியே 50 லட்சம் தொகையை தேர்தல் பத்திரம் மூலமாக பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights