News Highlights: ஜன 27-ல் சசிகலா விடுதலை- வழக்கறிஞர் தகவல்

Today’s Tamil News : மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 43வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது.

News In Tamil : தேர்தலில் வென்ற ஜோ பைடனை அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கு ஜோ பைடன், ஒபாமா, போரீஸ் ஜான்சன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆதரவாளர்கள் மூலம் டொனால்ட் ட்ரம்ப் வன்முறையைத் தூண்டி விட்டதாகத் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என டொனால்ட் ட்ரம்ப், மைக் பென்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், சட்டத்தை மதித்து சட்டரீதியாகப் போராடுவோம் என ஆதரவாளர்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் அறிவுரை கூறியுள்ளார்.

பறவைக்காய்ச்சல் தாக்கத்தால் நாமக்கல் பண்ணைகளில் முட்டை விலை 25 காசு குறைந்து ரூ.4.85 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜனவரி 11-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ.86.96-க்கும், டீசல் 26 காசுகள் அதிகரித்து ரூ.79.72-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Live Blog

Tamil News Updates :  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையில் எங்களுடன் இணைந்திருங்கள்.


21:35 (IST)07 Jan 2021

தமிழகத்தில் இன்று புதிதாக 805 பேருக்கு கொரோனா; 12 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 805 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பால் மாநிலத்தில் இன்று 12 பேர் உயிரிழந்தனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து 911 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 8,23,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுள்ளனர். இதில் 8,04,239 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 12,200 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

20:39 (IST)07 Jan 2021

டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வு : விடைக்குறிப்புகள் வெளியீடு

ஜனவரி 3ம் தேதி நடைபெற்ற குரூப் 1 தேர்வின் தற்காலிக விடைக் குறிப்புகளை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணையத்தில் தேர்வர்கள், பதிவு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதி, போன்றவற்றை உள்ளீடு செய்து விடைக் குறிப்பை தெரிந்துகொள்ளலாம்.

20:32 (IST)07 Jan 2021

பொங்கலுக்கு பிறகு பள்ளிகளைத் திறக்க 95% பெற்றோர்கள் ஒப்புதல்

பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்த பெற்றோர்கள் தெரிவித்த கருத்துகளை பள்ளிக்கல்வித்துறை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளது. பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க 95% பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 18ல் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

19:38 (IST)07 Jan 2021

மு.க.அழகிரி தனியாக கூட்டம் சேர்ப்பதால் பின்னடைவு இல்லை – கார்த்திக் சிதம்பரம்

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “மு.க.அழகிரி என்னுடைய நண்பர். அவரை நன்றாக எனக்கு தெரியும். என் மீது தனி அன்புகொண்டவர். முக அழகிரி தனியாக கூட்டம் சேர்ப்பதால் திமுகவுக்கு எந்தவிதம் பின்னடைவும் இல்லை. அவரது அறிக்கையால் கூட்டணிக்கு எந்தவித பாதிப்பு இருக்காது.” என்று தெரிவித்துள்ளார்.

18:43 (IST)07 Jan 2021

சசிகலா ஜனவரி 27ல் விடுதலையாக வாய்ப்பு; ஐகோர்ட்டில் தகவல்

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா ஜனவரி 27ம் தேதி விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக வருமான வரி வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. சசிகலா விடுதலையாக உள்ளதால் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என சசிகலா தரப்பு ஐகோர்ட்டில் கோரியுள்ளது.

16:34 (IST)07 Jan 2021

தடுப்பூசியை பெற தயாராக இருங்கள் – மத்திய அரசு

அனைத்து மாநிலங்களும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தைப் பெற தயாராக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

15:24 (IST)07 Jan 2021

சித்ரா கணவர் ஜாமீன் மனு!

நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு  சித்ரா தற்கொலை வழக்கில், ஜாமீன் கோரி ஹேம்நாத் மனு  ஜனவரி 18ம் தேதிக்குள் பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 

15:23 (IST)07 Jan 2021

ராமதாஸ் விளக்கம்!

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கலைஞர் சூழ்ச்சி செய்தார் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். 21 உயிர்களை கொடுத்து போராடிய வன்னியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 20% இட ஒதுக்கீட்டை 107 சாதிகளுக்கு கலைஞர் அள்ளிக்கொடுத்தார் என்றும்  நல்ல கனி என்று அழுகிய கனியைக் கொடுத்து ஏமாற்றினார் என்றும் கூறியுள்ளார்.

15:18 (IST)07 Jan 2021

3-வது டெஸ்ட் போட்டி!

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது .  ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக புகோவ்ஸ்கி 62, மார்னஸ் 67 ரன்களும் எடுத்தனர்

15:16 (IST)07 Jan 2021

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.  பிற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு  என  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

14:31 (IST)07 Jan 2021

அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வருகை!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நாளை தமிழகம் வருகை . கொரோனா தடுப்பூசி தொடர்பாக தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். 

13:38 (IST)07 Jan 2021

டெல்லியில் சூடுபிடித்த விவசாயிகளின் டிராக்டர் பேரணி

வேளான் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள விவசாய சங்கங்கள் இன்று டெல்லியில் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். ஆண், பெண் என அனைவரும் பங்குபெற்றனர்.

12:07 (IST)07 Jan 2021

100 சதவிகித இறக்கைகளுடன் திரையரங்குகள் இயக்க தடை விதிக்க வழக்கு

100 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்ற அறிவிப்பு பேரிடர் விதிக்கு எதிரானது என்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ், ஆனந்தி அமர்வில் நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

11:13 (IST)07 Jan 2021

சிகிச்சை முடிந்து கங்குலி வீடு திரும்பினார்

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிசிசிஐ தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கங்குலி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு கங்குலி நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

10:52 (IST)07 Jan 2021

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த வன்முறையின் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். ஏற்கெனவே ஒரு பெண் துப்பாக்கிச்சூட்டில் இறந்த நிலையில் 3 பேர் தள்ளுமுள்ளுவில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துள்ளனர்.

10:28 (IST)07 Jan 2021

மனஉளைச்சலுக்கு ஆளானேன் – பிரதமர் மோடி ட்வீட்

“வாஷிங்டன் டி.சி.யில் கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்திகளைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளானேன். ஒழுங்கான மற்றும் அமைதியான அதிகார பரிமாற்றம் தொடர வேண்டும். சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது” என்று அமெரிக்க வன்முறை குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

10:20 (IST)07 Jan 2021

ட்ரம்ப் ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கம்

அதிபர் தேர்தல் முடிவுகளை ஜோ பைடன் தரப்பு திருடிவிட்டதாக டொனால்டு ட்ரம்ப் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, கருத்துகள் வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக்கூறி ஃபேஸ்புக்கிலிருந்து ட்ரம்ப் நீக்கப்பட்டிருக்கிறார்.

10:15 (IST)07 Jan 2021

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் உயிரிழப்பு

அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் புகுந்த ட்ரம்ப்பின் ஆதரவாளர்களை வெளியேற்றத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்தக் கலவரத்தின்போது குண்டுபாய்ந்த பெண் உயிரிழந்துள்ளார். அங்கு நிலைமை மிகவும் மோசமானதால் வாஷிங்டனில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

09:38 (IST)07 Jan 2021

தைரியமான தலைவர்கள் தேவை – பைடன்

“ஜனநாயகம் உடையக்கூடியது என்பதை இன்று மறுமுறை நினைவுகூர்ந்துள்ளது வேதனையளிக்கிறது. அதனை பாதுகாக்க நல்ல விருப்பமுள்ள மக்கள், எந்த நேரத்திலும் அதிகாரத்தையும் தனிப்பட்ட நலனையும் பின்தொடர்வதற்கு அர்ப்பணிக்காத எழுந்து நிற்க தைரியம் கொண்ட தலைவர்கள் தேவை” என ஜோ பைடன் ட்வீட் செய்துள்ளார்.

09:25 (IST)07 Jan 2021

இப்போது வெற்றி பெறுவோம் – ஜோ பைடன் ட்வீட்

“போர் மற்றும் மோதல்கள் மூலம், அமெரிக்கா மிகவும் சகித்துக்கொண்டது. நாம் இங்கே சகித்துக்கொள்வோம், இப்போது வெற்றி பெறுவோம்” என அமெரிக்காவில் நடந்துவரும் வன்முறையை தொடர்ந்து ஜோ பைடன் ட்வீட் செய்துள்ளார்.

09:17 (IST)07 Jan 2021

ட்ரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கு 24 மனி நேரத்துக்கு முடக்கப்பட்டுள்ளது.

Latest Tamil News : தேர்தல் பத்திரத்  திட்டத்தின் கீழ், 2019- 2020 நிதியாண்டில்  தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான திமுக ரூ.45 கோடியே 50 லட்சத்தை தேர்தல் நிதியாக பெற்றுள்ளது. தேர்தல் நிதி வசூல் தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் அனைத்து கட்சிகளும் 2019-20 நிதியாண்டில் வசூலித்த தொகை தொடர்பாக தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டன.

2019-20 நிதியாண்டில், தேர்தல் செலவுகளுக்காக அதிமுக  பெற்ற ரூ.52 கோடியில், 46 கோடி டாடா நிறுவனத்தின் புரோகிரசிவ் தேர்தல் அறக்கட்டளை மூலமாகவும், 5 கோடியே 38 லட்சம் ரூபாயை ஐ.டி.சி. நிறுவனம் மூலமாகவும் பெற்றது. தேர்தல் செல்வவீனங்களுக்காக திமுக பெற்ற 48 கோடியே 30 லட்ச ரூபாயில், 45 கோடியே 50 லட்சம் தொகையை தேர்தல் பத்திரம் மூலமாக பெற்றுள்ளது.

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news today live us president donald trump jow biden tamil nadu politics weather corona

Next Story
சீன ராணுவத்திற்கு கூடுதல் அதிகாரம்: புதிய பாதுகாப்பு சட்டம் அமல்China has revised its National Defence Law expanding the power of its armed forces சீன ராணுவத்திற்கு கூடுதல் அதிகாரம்: புதிய பாதுகாப்பு சட்டம் அமல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com