தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அழைப்பு… ஆப்கான் மக்களுக்கு உதவிக்கரம்… ஐ.நா சபையில் பிரதமர் மோடி உரை

Tamil News Update : ஆப்கானிஸ்தானின் பிரதேசம் பயங்கரவாதத்தை பரப்பவோ அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவோ பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

PM Modi Speech IN Un Update : அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி,  இன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது அமர்வில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,  “இன்று உலகம் முழுவதும் பிற்போக்கு சிந்தனை மற்றும் தீவிரவாதத்தின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தி உலகை அறிவியல் அடிப்படையிலான, பகுத்தறிவு மற்றும் முற்போக்கு சிந்தனைக்கான தளமாக மாற்றுவது அவசியம்.

பயங்கரவாதத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தும் நாடுகள் அது தங்களுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கடல் பாதுகாப்பு, கோவிட் பிந்தைய உலகில் உலகப் பொருளாதாரத்தின் பன்முகப்படுத்தப்பட்ட அணுகுமுறை மற்றும் சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான இந்தியாவின் பயணம் போன்ற விஷயங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார். மேலும் வளர்ச்சி என்பது அனைத்தையும் உள்ளடக்கியதாகவும், அனைத்து இடங்களிலும், உலகளாவியதாகவும், எந்தவொரு நாட்டிற்கும் முதல் முன்னுரிமையாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறின்னார்

மேலும் இந்த ஆண்டில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு, நம்பிக்கையுடன் மீள் ஊக்கமளிப்பது, நிவாரணத்திற்கு தேவையானதை கொடுப்பது, மக்களின் உரிமைகளை பதிப்பது போன்ற செயல்களால் ஐக்கிய நாடுகள் சபையை புத்துயிர் பெறுகிறது. தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, கொரானா தொற்று பாதிப்பினால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து “ஜனநாயகத்தின் தாய் என்று கருதப்படும் ஒரு நாட்டை நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்.””நான் இதை என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன். இந்தியா உலகின் முதல் டிஎன்ஏ கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது என்பதை ஈந்த உரையின் மூலம்  அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். சர்வதேச சமூகம் ஒரே குரலில் ஒரு விதி அடிப்படையிலான உலக ஒழுங்கை வலுப்படுத்த வேண்டும். நாம் ஏன் கடல் வளங்களைப் பயன்படுத்துகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், துஷ்பிரயோகம் செய்யக்கூடாது, “என்று கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஆப்கான் விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தான்  பயங்கரவாதத்தை பரப்பவோ அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவோ பயன்படுத்துகிறதா என்பதை உறுதி செய்வது அவசியம். ஆப்கான் மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியது அவசியம்  என்றும் தெரிவித்தார்.

“கொடிய கொரோனாவுக்கு லட்சக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். எங்களது பன்முகத் தன்மை தான் வலிமையான ஜனநாயகத்தின் அடையாளமாக திகழ்கிறது. இதன் மூலம் கடந்த 7 ஆண்டுகளாக நாட்டு மக்களுக்கு சேவை செய்து வருகிறேன்” என்றும், பலருக்கு வீடுகள் கொடுக்கப்பட்டு வீட்டின் உரிமையாளர்கள் ஆக்கப்பட்டுள்ளனர்” என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து கொரோனா தடுப்பூசி குறித்து பேசிய பிரதமர் மோடி “மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி மீதான பரிசோதனையும், இந்தியாவில் நடைபெற்று வருகிறது” வருவதாக குறிப்பிட்டார். மேலும் இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க உலகிலுள்ள தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்; என்றும் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news update for pm modi speech in un america

Next Story
இந்திய – அமெரிக்க உறவு ஜனநாயக மதிப்பு, பன்முகத் தன்மையோடு தொடர்பு உடையது; மோடியிடம் கூறிய பைடன்Modi, joe biden meeting
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com