/tamil-ie/media/media_files/uploads/2018/07/1-101.jpg)
சீன பெருங்சுவர் பற்றி சீன பெண் ஒருவர், ஆங்கிலம் கலக்காத தமிழில் அருமையாக பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
தமிழ் உள்பட 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியத. அதிலும் தமிழ்தான் திராவிட மொழிக்குடும்பத்திலேயே மிகப்பழமையான மொழி என்றும் சமீபத்தில் நடத்திய ஆழ்ய்வு ஒன்றில் அதிகாரப்பூர்வமான தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித குலத்தின் உயிர் மூச்சாக விளங்குவது, மொழி. மொழியின்றேல் ஏனைய உயிரினங்களுக்கும் மனித குலத்துக்கும் வேறுபாடு காண முடியாது. அதனால் தான், மொழி இன்றேல் மூச்சில்லை பேச்சில்லை என்று கூறப்படுகின்றது. மற்ற மொழிகளை காட்டிலும் தமிழ் மொழி கண்டங்களை தாண்டி பலரையும் ஈர்க்க கூடியது.
Thanks for this video Ravi. Fun start to a Monday. Not easy to learn the accent & cadence of the language but this Chinese lady seems to have conquered the Great Wall of Tamil. Have to ask my buddy @MM_Murugappan if he approves..???? pic.twitter.com/h3V8cr30Gm
— anand mahindra (@anandmahindra) 30 July 2018
அதே தமிழ் மொழியை ஆங்கிலம் கலக்காத தமிழில் பேச பலரும் படாதபாடு பட்டு வருகின்றன. ஆனால் சீனப்பெண் ஒருவர் தமிழ் மொழி மீது கொண்ட பற்று, ஆர்வம் காரணமாக ஆங்கில கலக்காத தூயதமிழில் பேசி பலரையும் வியக்க் வைத்து வருகிறார். சமீபத்தில் சீன பெருங்சுவரின் வரலாற்றை பற்றி தமிழில் பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அட்டகாசமாக தமிழில் பேசி அசத்தும் இந்த சீனப்பெண்ணின் காட்சியினை நீங்களும் மிஸ் பண்ணாமல் கேட்டுத்தான் பாருங்களேன்.
சீனப்பெண்ணின் அருமையான தமிழ் பேசும் வீடியோவை பார்த்த மகேந்திர நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திர தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.