இலங்கை அரசியல் மாற்றம் : இலங்கையில் நிலவி வரும் அரசியல் குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ரணில் விக்ரமசிங்கேவின் ஆட்சியைக் கலைத்துவிட்டு புதிய பிரதமராக பொறுப்பில் அமர வைக்கப்பட்டார் மகிந்த ராஜபக்ஷே. ஆனால் அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வந்தன.
இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜெயசூர்யா “பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் பிரதமர் பதவி என்ற பேச்சுக்கே இடமில்லை” என திட்டவட்டமாக தன்னுடைய எதிர்ப்பினை பதிவு செய்தார். இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க
இந்நிலையில் ராஜபக்ஷேவிற்கு ஆதரவாக இருந்த காலி மாவட்டத்தின் எம்.பி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அதிபர் சிறிசேனாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அது பற்றிய முழுமையான செய்திகளைப் படிக்க
இலங்கை அரசியல் மாற்றம் : சிறிசேனாவிற்கு ஆதரவு இல்லை
தற்போது இலங்கையில் இருக்கும் மற்றொரு கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியும் தங்களால் சிறிசேனாவின் கட்சிக்கும் செயலுக்கும் ஆதரவு தர இயலாது என திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் இதர ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக மைத்ரிபால சிறிசேனாவின் அலுவலத்திற்கு சென்று தங்களால் அவரது அரசாங்கத்தில் இணைய முடியாது என்று கூறியதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கிறார் எம்.பி. மனோ கணேசன்.