சாகும் தருவாயில் இருந்த காதலியை மணந்து, இறுதி ஆசையை நிறைவேற்றிய காதலன்.

திருமணம் ஆன 48 மணி நேரத்தில் டீனி மருத்துவமனையிலியே இறந்து விட்டார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாகும் தருவாயில் இருந்த, தனது காதலியை மணந்து, அவரின் இறுதி ஆசையை நிறைவேற்றிய காதலனின்   உருக்கமான நிகழ்வு கண்களை கலங்க வைத்துள்ளது.

பலவகையான திருமணங்கள் மத்தியில், அமெரிக்காவில் கடந்த  வாரம், மருத்துவமனையில் நடைபெற்ற திருமணம் ஒன்று  பலரின் உள்ளங்களையும் நெகிழ வைத்துள்ளது.  19 வயதாகும் டீனி என்ற இளம்பெண் சிறுநீரக புற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நோயின் தாக்கம் அதிகமானதால் இன்னும் இரண்டு நாட்களின் டீனி இறந்து விடுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், கவலையடைந்த  இளம்பெண்ணின் குடும்பத்தார், தங்கள் மகளின் இறுதி ஆசைக் குறித்துக் கேட்டுள்ளனர் , அந்த பெண் இறப்பதற்குள்  தனது காதலனை மணந்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனைக் கேள்விப்பட்ட பெண்ணின் காதலன், ஆர்ம்ஸ் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து தனது காதலியை மணப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளான்.

ஆனால், இதற்கு ஆர்ம்ஸின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் தனது காதலியின் ஆசையை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்த ஆர்ம்ஸ்  கடந்த 14 ஆம் தேதி, காதலர் தினந்தன்று  டீனியை மருத்துவமனையில் முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார், அத்துடன், இவர்களின் திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த மகிழ்ச்சியை முழுவதுமாக கொண்டாடுவதற்குள் திருமணம் ஆன 48 மணி நேரத்தில் டீனி  மருத்துவமனையிலியே இறந்து விட்டார்.

இந்த சோக நிகழ்வை அமெரிக்காவின் தனியார் நிகழ்ச்சி ஒன்று தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பியுள்ளது.  அதே சமயத்தில், காதலியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ஆர்ம்ஸுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

 

 

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Teen with cancer dies on valentines day after getting married two days earlier

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com