Texas freeze led to release of tons of air pollutants as refineries shut : அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தில் இருந்து டன் கணக்கில் மாசு வெளியேறி அச்சத்தை உருவாக்கியுள்ளது. டெக்ஸாஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அதீத குளிர் நிலை காரணமாக எண்ணெய் சுத்தகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆலைகளின் செயல்பாட்டினை நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணத்தால் எண்ணெய் சுத்தகரிப்பு ஆலைகளில் இருந்தும், பெட்ரோகெமிக்கல் உலைகளில் இருந்தும் வெளியேறிய மாசு டெக்ஸாஸ் மாகாணத்தில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
வழக்கத்திற்கு மாறான ஆர்டிக் குளிர் காரணமாக டெக்ஸாஸ் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 20க்கும் மேற்பட்டோர் உறை பனியால் உயிரிழந்த நிலையில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சார விநியோகம், இயற்கை எரிவாயு மற்றும் உலைகளை தொடர்ந்து இயக்க தேவைப்படும் பொருட்களின் விநியோகமும் நிறுத்தப்பட்டது.
மேலும் படிக்க : கார்பன் வாட்ச் : இந்தியாவில் கார்பன் தடத்தை அறிய உதவும் முதல் செயலி!
உலைகளை இயக்க போதுமான உள்ளீடு இல்லாத காரணத்தால் உலைகளில் இருந்து பெரிய தீப்பிழம்புகள் எழ துவங்கின. உள்ளீடு இல்லாத காரணத்தால் உலைகள் சேதம் ஆவதை தடுக்க இது போன்ற நிலை உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த தீப்பிழம்புகள் கிழக்கு டெக்ஸாசை கருமையாக்கியது.
ஐந்து பெரிய எண்ணெய் சுத்தகரிப்பு ஆலைகளில் இருந்து 3,37,000 பவுண்டு மாசுக்கள் வெளியேற்றப்பட்டன. பென்சென், கார்பன் மோனாக்ஸைடு, ஹைட்ரஜன் சல்ஃபைட், சல்ஃபர் டையாக்ஸைடு போன்றவையும் இதில் அடங்கும். இதனால் ஏற்பட்டுள்ள இழப்பீடுகளை மதிப்பீடு செய்து வருகின்ற எண்ணெய் நிறுவனங்கள். இந்த விபத்தினால் மக்களுக்கு எவ்வளவு தூரம் ஆபத்து என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil