தாய்லாந்து குகையில் 2 வாரமாக தத்தளிக்கும் சிறுவர்கள்: மீட்கச் சென்ற நீச்சல் வீரர் பலியான சோகம்

குழந்தைகளை மீட்பதற்காக உள்ளே சென்ற நீச்சல் வீரர் உயிரிழந்த சோகம்

தாய்லாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் சியாங் மாகாணத்தில் தாம் லுவாங் நாங் நாண் என்ற 7 கிலோ மீட்டர் குகை உள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஜூன் 23ம் தேதி  25 வயது மதிக்கத்தக்க கால்பந்தாட்டப் பயிற்சியாளர் தன்னுடைய மாணவர்கள் 12 பேருடன் கால்பந்தாட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

பயிற்சி முடிவடைந்தவுடன் அனைவரும் அருகில் இருக்கும் அந்த குகைக்குள் சுற்றிப் பார்க்கச் சென்றிருக்கிறார்கள். வடக்கு தாய்லாந்தில் இது மழைக்காலம் ஆகும்.

எதிர்பாராத விதமாக அன்று அங்கு மழை பெய்ததால் குகையின் நுழைவாயில் முதற்கொண்டு அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துவிட்டது.

குறித்த நேரத்தில் வீட்டிற்கு வரத் தவறிய காரணத்தால் அக்குழந்தைகளை அக்கம்பக்கத்தில் தேடினார்கள் அவர்களின் பெற்றோர்கள்.

குகை அருகே அவர்களுடைய மிதிவண்டிகள் இருப்பதை கண்டறிந்து காவல் துறையினருக்கும், மீட்பு குழுவிற்கும் தகவல் தெரிவித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த கடற்படையினர் குகையில் தேங்கியிருக்கும் மழைநீரை மோட்டர் பம்புகள் மூலம் வெளியேற்ற முயற்சித்தினர். ஆனால் அங்கு மழை தொடர்ந்து பெய்துவருவதால் அவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Thailand Cave Search

ஆலோசனை செய்யும் மீட்பு குழு

இரண்டு வாரங்கள் ஆகியும் அவர்களை மீட்பது பெரும் சவாலாக இருக்கின்றது. பாறைகளைக் குடைந்து உள்ளே செல்லலாம் என்றால், பாறைப்பகுதிகள் முழுவதும் சுண்ணாம்பினால் ஆனாது, மேலும் மழை காலமாக இருப்பதால் குகையில் விபத்து ஏற்பட்டு, அது அக்குழந்தைகளின் மீதே விழுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மேலும், குகை நீச்சல்க்காரர்களை அழைத்துச் சென்று மீட்புப் பணியை தொடர நினைத்தார்கள். ஆனால், குகையின் ஒவ்வொரு பகுதியிலும் மிகவும் குறுகிய பாதையைக் கொண்ட வழிகளே அதிகம் இருக்கிறது. எதையாவது தவறாக முயற்சித்து வழி அடைப்பட்டு போகும் பட்சத்தில் அவர்களை மீட்பது மிகவும் கடினமாகிவிடும்.

பொதுமக்கள் பிரார்த்தனை

குகைக்குள் அடைப்பட்டுக் கிடக்கும் 13 நபர்களும் எந்தவொரு ஆபத்துமின்றி உயிருடன் வெளியே வரவேண்டும் என்று தாய்லாந்து மக்கள் கடவுளை வேண்டி வருகிறார்கள்.

எலோன் மாஸ்க் உதவி

மீட்டு நடவடிக்கையில் தாமதம் ஏற்படுவதையும், அம்மாணவர்களின் நலனையும் உலகமே கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மாஸ்க் தங்களின் நிறுவனத்தால் என்ன உதவி செய்ய இயலுமோ அதை தாய்லாந்து அரசாங்கத்திற்கு செய்து, அக்குழந்தைகளை மீட்க உதவுவோம் என ட்விட்டரில் தகவல் வெளியிட்டார்.

நீச்சல் வீரர் உயிரிழப்பு

அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் சிலர் அந்த குகைக்கு வெளியே காத்திருக்கின்றார்கள். இந்நிலையில், மீட்பு குழுவுடன் இணைந்து குழந்தைகளை மீட்கச் சென்ற நீச்சல் வீரர் சமரன் பூணன் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளார்.

இரண்டு வாரங்கள் கழித்து முதல் முறையாக குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்கள். இந்த தவறுக்கு நான் தான் முழுக்காரணம் என்று கூறி மன்னிப்பு கேட்டுள்ளார் அந்த கால்பந்தாட்ட பயிற்சியாளர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close