கருந்துளை உருவாக்கம்: இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு
அண்டவெளியின் ஒரு பகுதியான கருந்துளை பற்றிய கண்டுபிடிப்புகளுக்கு உதவிய ரோஜர் பென்ரோஸுக்கும் , ரெய்ன்ஹார்ட் ஜென்செல் , ஆண்ட்ரியா கெஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது
ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் அமைப்பு, ஆல்ஃபிரட் நோபல் நினைவாக வழங்கப்படும் அறிவியலுக்கான, இந்த ஆண்டு பரிசு அண்டவெளியின் ஒரு பகுதியான கருந்துளை (blackhole) பற்றிய கண்டுபிடிப்புகளுக்கு உதவிய ரோஜர் பென்ரோஸுக்கும் (Roger Penrose), ரெய்ன்ஹார்ட் ஜென்செல் (Reinhard Genzel), ஆண்ட்ரியா கெஸ் (Andrea Ghez) ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டது.
அகாடமி இந்த ஆண்டின் பரிசை ஒரு பாதியை ரோஜர் பென்ரோஸுக்கும், மற்ற பாதி கூட்டாக ரெய்ன்ஹார்ட் ஜென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸுக்கும் வழங்க முடிவு செய்துள்ளது.
பொதுச் சார்புக் கோட்பாடு (general theory of relativity) கருந்துளைகள் உருவாக வழிவகுக்கிறது என்பதை பென்ரோஸ் காட்டினார்.
விண்மீனின் மையத்தில் உள்ள நட்சத்திரங்களின் இயக்கங்கள் கண்ணுக்குத் தெரியாத கனமான ஒரு பொருளால் ஈர்க்கப்படுகிறது என்பதை ஜென்சல் மற்றும் கெஸ் கண்டுபிடித்தனர். தற்போது, வரை அந்த கனமான பொருள் ஒரு ராட்சச கருந்துளை என்றே அறியப்படுகிறது.
பரிசுத் தொகை 10 மில்லியன் ஸ்வீடிஷ் குரோணர் ஆகும் ( இந்திய ரூபாயின் மதிப்பு ரூ .8,22,85,318).
பரிசுத் தொகையில், ஒரு பாதி ரோஜர் பென்ரோஸுக்கும், மறுபாதி ரெய்ன்ஹார்ட் ஜென்செல் (Reinhard Genzel), ஆண்ட்ரியா கெஸ் (Andrea Ghez) ஆகிய இருவருக்கும் வழங்கப்பட இருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil