New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/05/template-9.jpg)
australia
விலையுயர்ந்த வாட்ச்கள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துவிட்டு சென்றான்.
australia
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள ஷாப்பிங் மாலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முகமூடி அணிந்த திருடன் கொள்ளையில் ஈடுபட்ட வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
ஆஸ்திரேலியாவின் வடக்கு பிரிஸ்பேன் பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலில் அங்குஸ் அண்ட் கூட்டி நகைக்கடையில், டிரம்ப் முகமூடி அணிந்திருந்த இளைஞன் நுழைந்தான். தான் வைத்திருந்த சிறிய கோடாரியை கொண்டு கடையின் கண்ணாடியை உடைக்க முயன்றான். அது பலனளிக்காததால், கண்ணாடியை எட்டி உதைத்து உள்ளே சென்று விலையுயர்ந்த வாட்ச்கள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துவிட்டு சென்றான்.
அவன் அங்கிருந்து தப்பிச்செல்லும்போது அவனது முகமூடி கழன்றுவிழுந்ததாக குயின்ஸ்லாண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த குற்றவாளி 20 வயது இளைஞன் என்றும், அவனது முகம் சரியாக புலப்படாததால், இந்த சிசிடிவி வீடியோவை அதிகம் பகிர்ந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.