சிங்கப்பூரில் இருந்து லண்டன் சென்ற சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் பயணிகள் விமானத்தில் மைனா ஒன்று கிட்டத்தட்ட 12 மணி நேரம் பயணம் செய்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
விமானத்தில் மைனா:
சிங்கப்பூரில் இருந்து லண்டனுக்கு கடந்த 7 ஆம் தேதி சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் தவறுதலாக மைனா ஒன்று நுழைந்தது.
விமானத்தில் நுழைந்த மைனா கிட்டத்தட்ட 12 மணி நேரம் பயணிகளுடம் சேர்ந்து விமானத்தில் பயணித்தது. பறக்கும் விமானத்தில் மைனா அங்கும் இங்குமாக பறக்கும் காட்சிகள், பயணிகளின் சீட்டில் அமரும் காட்சிகள், மைனாவை கேபின் க்ரூ உறுப்பினர்கள் பிடிக்கும் காட்சிகள் அனைத்தும் இணையத்தில் பரவினர்.
இதற்கு பதிலளித்துள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ''ஜனவரி 7 பயணித்த SQ322 விமானத்தில் மைனா பறவை பயணித்தது உண்மைதான்'' என்று கூறியுள்ளது. மேலும், மைனாவை பிடித்து லண்டனில் விலங்குகளுக்கான இடத்தில் ஒப்படைத்து விட்டதாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விளக்கம் அளித்துள்ளது.