வைரலாகும் வீடியோ: நேரலையில் சண்டைப் போட்டுக் கொண்ட செய்தி வாசிப்பாளர்கள்!

தனியார் ஊடகத்தில் ஆண் மற்றும் பெண் செய்தி வாசிப்பாளர்கள் இருவர் நேரலையில் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தனர்

பாகிஸ்தானில் நேரலையில் இரண்டு செய்தி வாசிப்பாளர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக பேசி, சண்டைப்போட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தொலைக்காட்சி, நேரலையில் எப்போதாவது சில சுவாரசியமான நிகழ்வுகள் நடப்பது உண்டு. அப்படி எதாவது நடந்தால் அதை நெட்டிசன்கள் வைரல் ஆக்காமல் விடமாட்டார்கள். அந்த வகையில், சமீபத்தில் பாகிஸ்தான் செய்தி ஊடகத்தில், இரண்டு செய்திவாசிப்பாளர்கள் நேரலையில் சண்டைப்போட்டுக் கொண்ட வீடியோ சமூகவலைத்தலங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாகிஸ்தானின் DP WEB TV என்ற தனியார் ஊடகத்தில் ஆண் மற்றும் பெண் செய்தி வாசிப்பாளர்கள் இருவர் நேரலையில் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இருவருக்கும் இடையில் எந்த செய்தியை யார் வாசிப்பது? என்ற போட்டி ஏற்பட்டு, போட்டி வாக்குவாதத்தில் வலுத்து, கடைசியில் சண்டையில் முடிந்தது.

நேரலை சென்றுக் கொண்டிருந்த போதே, இருவரும் சண்டையிட்டுக் கொண்டது, தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. இதைப் பார்த்த பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் அவர்களது சண்டையை பார்த்து ரசித்துள்ளனர். மேலும், இந்த வீடியோ நெட்டிசன்களால் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

×Close
×Close