Advertisment

காஷ்மீர் விவகாரத்தில் மீண்டும் தலையிட்ட சீனா... தலிபான்களை சந்தித்த ஒசாமா பின் லேடனின் மகன்...

கர்கிவ் ரஷியாவால் தாக்கப்படலாம் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அண்மையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து மக்கள் கர்கிவ் உக்ரைனில் தான் உள்ளது என்ற பதாகைகளை ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
காஷ்மீர் விவகாரத்தில் மீண்டும் தலையிட்ட சீனா... தலிபான்களை சந்தித்த ஒசாமா பின் லேடனின் மகன்...

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அதிபர் ஜீ ஜின்பிங்கை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அண்மையில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.

Advertisment

அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட இரு நாடுகளின் கூட்டறிக்கையில் மீண்டும் காஷ்மீர் விவகாரம் கையிலெடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், காஷ்மீர் விவகாரத்தை ஒருதலைபட்சமான நடவடிக்கைகள் எடுக்கப்படக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

ஜம்மு-காஷ்மீர் சூழ்நிலை குறித்து பாகிஸ்தான் விவரமாக விளக்கியது. ஐ.நா. சாசனம், இதுதொடர்புடைய பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில்  காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்பட வேண்டும் என்று சீனா தெரிவித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குளிர்க்கால ஒலிம்பிக் போட்டி தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சீனப் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான குழு சீனாவுக்கு 4 நாள் பயணமாக சென்றது.

காஷ்மீர் விவகாரத்தில் சீனா இதற்கு முன்பு தலையிட்டு கருத்து தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டறிக்கைக்கு மத்திய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்தவொரு அறிவிப்பு வரவில்லை. எனினும், காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் இதில் வேறு எந்த நாடும் தலையிடத் தேவையில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தலிபான்களை சந்தித்த

ஒசாமா பின் லேடனின் மகன்:

ஐ.நா. அறிக்கையில் தகவல்

ஆப்கானிஸ்தானில் ஜனநாயக நாட்டை வீழ்த்தி அந்நாட்டை கைப்பற்றிய தலிபான் அமைப்பு தற்போது அங்கு ஆட்சி செய்து வருகிறது.

அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக அந்நாட்டுக்கு கடந்த ஆண்டு அக்டோபரில்  பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் சென்றதாக ஐ.நா. அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், ஆப்கனில் உள்ள வெளிநாடுகளை சேர்ந்த பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் எதையும் தலிபான் அரசு எடுக்கவில்லை என்றும்#

தலிபான்களுக்கும் ஒசாமா பின்லேடன் நிறுவிய அல்-காயிதா பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பது தெளிவாகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனக்கு பிறகு இவர் தான்:

இங்கிலாந்து ராணி எலிசபெத் அறிவிப்பு

95 வயதாகும் இங்கிலாந்து ராணி எலிசபெத் தனக்கு பிறகு இங்கிலாந்து ராணியாக இளவரசர் சார்லசின் மனைவி கமிலா இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து ராணியாக அரியணை ஏறி இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

ஏழு தசாப்தங்களாக ஆட்சி செய்த முதல் பிரிட்டிஷ் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமையையும் ராணி இரண்டாம் எலிசபெத் பெற்றார்.

இந்தச் செய்திதான் இங்கிலாந்தின் அனைத்து செய்தித்தாள்களிலும் முதல் பக்கச் செய்தியாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு:

5 பாகிஸ்தான் வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இருந்து பயங்கரவாதிகள், பாகிஸ்தானிய வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில், குர்ரம் மாவட்டத்தில் இருந்த பாகிஸ்தானிய வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.  இதனை ராணுவ ஊடக விவகார பிரிவு தெரிவித்துள்ளது.

இதேபோன்று பாகிஸ்தான் வீரர்களும் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.  இதில், அவர்களுக்கும் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தத் தாக்குதலுக்கு தெஹ்ரீக் ஐ தலீபான் அமைப்பு பொறுப்பேற்று கொண்டது.

உக்ரைனில் மக்கள் மிகப் பெரிய பேரணி

போர் பதற்றம் ஏற்பட்டுள்ள உக்ரைனில்  பதற்றமான சூழல் காணப்பட்டு வருகிறது. மிகப் பெரிய நகரான கர்கிவில் ஆயிரக்கணக்கானோர் பேனர்களை ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர்.

கர்கிவ் நகர் ரஷிய எல்லையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ளது.

கர்கிவ் ரஷியாவால் தாக்கப்படலாம் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அண்மையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து மக்கள் கர்கிவ் உக்ரைனில் தான் உள்ளது என்ற பதாகைகளை ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment