Advertisment

அமெரிக்காவில் கார் மோதி விபத்து; இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் பரிதாப பலி

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதிகள் அரவிந்த் (45), பிரதீபா (42) இவர்களது மகன் ஆண்ட்ரில் (17) ஆகியோருடன் டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
us three member no more

டெக்சாஸில் புதன்கிழமை நடந்த கார் விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அவர்களின் 14 வயது மகன் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதிகள் அரவிந்த் (45), பிரதீபா (42) இவர்களது மகன் ஆண்ட்ரில் (17) ஆகியோருடன் டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Three members of Indian-origin family killed in a car crash in US

டெக்சாஸில் புதன்கிழமை நடந்த கார் விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அவர்களுடன் காரில் பயணிக்காததால் அவர்களின் 14 வயது மகன் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.

அரவிந்த் மணி (45), அவரது மனைவி பிரதீபா அரவிந்த் (42), மற்றும் அவர்களது 17 வயது மகள் ஆன்ட்ரில் அரவிந்த், டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று கொண்டிருந்தனர், அங்கு ஆண்ட்ரில் கல்லூரி படிப்பைத் தொடங்கவிருந்தார்.

அவர்களின் வாகனம் ஆகஸ்ட் 14-ம் தேதி காலை 6 மணியளவில், காடிலாக் சி.டி.எஸ் உடன் மோதியது. இதனால், அமெரிக்க நெடுஞ்சாலை 281-ல் அவர்களுடைய காரின் பின்பக்க டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வருகிற வாகனங்கள் போக்குவரத்துப் பகுதிக்குச் சென்றது என டெக்ஸாஸ் பொதுமக்கள் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

அரவிந்த் குடும்பம் டெக்சாஸில் உள்ள லியாண்டரில் வசித்து வந்தது. இந்த விபத்தின் போது காரில் இல்லாத அவர்களின் 14 வயது மகன் ஆத்ரியன் மட்டுமே அவர்களின் கும்பத்தில் எஞ்சியிருக்கிறார்.

‘கோ ஃபண்ட் மி’ GoFundMe பிரச்சாரம், அவர்களது குடும்ப நண்பர் ராஜாராமன் வெங்கடாசலத்தால் ஆத்ரியனுக்கு சட்ட மற்றும் கல்விச் செலவுகளுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்டது. கேசென் டிவி (KCENTV) செய்திப்படி, வியாழக்கிழமை மதியம் வரை, இந்த பிரச்சாரம் மூலம் 8,300-க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்களிடம் இருந்து 4,00,000 அமெரிக்க டாலருக்கு மேல் திரட்டப்பட்டுள்ளது.

“9-ம் வகுப்பு படிக்கத் தொடங்கி இருக்கும் ஆத்ரியன், தனது குடும்பத்துடன் பயணத்தில் சேர முடியாததால், இப்போது அவர்கள் இல்லாமல் வாழ்க்கையை எதிர்கொள்கிறான். பல கனவுகள் மற்றும் அபிலாஷைகளுடன் இருக்கும் இந்தச் சிறுவனுக்கு, இறுதிச் சடங்குகள், சட்ட விவகாரங்கள் மற்றும் தொடர் கவனிப்பு ஆகியவற்றிற்கு நம்முடைய ஆதரவு தேவை. உங்கள் கல்விச் செலவுகள் உட்பட, இந்த சவாலான நேரத்தை ஆஸ்டினில் உள்ள அவரது மாமாவின் குடும்பத்துடன் செல்ல அவருக்கு உதவுங்கள்” என்று கோ ஃப்ண்ட் மி பதிவு குறிப்பிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

America
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment