மேலும் 3 சிங்கம், 4 புலிகளுக்கு கொரோனா: மனிதரிடம் இருந்து பரவியதா?

நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் விலங்குகள் பூங்காவில் மேலும் 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேஷனல் ஜியோகிராஃபிக் தெரிவித்துள்ளது.

By: Published: April 23, 2020, 5:38:24 PM

நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் விலங்குகள் பூங்காவில் மேலும் 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேஷனல் ஜியோகிராஃபிக் தெரிவித்துள்ளது. பிராங்க்ஸ் விலங்குகள் பூங்காவில் ஒரு புலிக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு மேலும், அங்கே 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துளது. அது மட்டுமில்லாமல், அங்கே மேலும் 6 புலிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

வைரஸ் தொற்று பரவல் காரணமாக விலங்குகள் பூங்கா பொதுமக்கள் பார்வையிடுவதை தடுக்க மூடப்பட்டு 11 நாட்களுக்குப் பிறகு, மார்ச் 27 அன்று, நோயின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கிய பின்னர், நாடியா என்ற நான்கு வயது மலாயன் புலிக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதே போல மற்ற 3 புலிகளும் 3 சிங்கங்களும் அறிகுறிகளைக் காட்டிய பிறகு நடத்தப்பட்ட பரிசோதனைகள் அவைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதிப்படுத்தியது.

இந்த விலங்குகள் பூங்காவின் அதிகாரி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகள் பராமரிப்பாளர் ஒருவரிடம் இருந்து அவைகளுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால், அவைகள் அந்த நேரத்தில் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்படவில்லை.

பாதிக்கப்பட்ட விலங்குகள் அனைத்தும் சிறப்பாக செயல்படுகின்றன. நல்ல பசியும், குறைவாக இருமலும் இருப்பதாக விலங்குகள் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மூன்று சிங்கங்கள் மற்றும் நான்கு புலிகள் மீது கூடுதல் சோதனைகள் எப்போது நடத்தப்பட்டன அல்லது விலங்குகள் பூங்கா பரிசோதனை முடிவுகளைப் எப்போது பெற்றது என்று தெளிவாகத் தெரியவில்லை என்று நேஷனல் ஜியோகிராஃபிக் செய்தியில் கூறியுள்ளது. விலங்குகள் பூங்காவின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக, மல மாதிரிகளைப் பயன்படுத்தி கூடுதல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனை செய்வதற்கு மயக்க மருந்து செலுத்த தேவைப்படவிலலி என்று விலங்குகள் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, நியூயார்க் மாநிலத்தில் இரண்டு வளர்ப்பு புலிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் துணை விலங்குகளில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதைக் குறிக்கிறது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். லேசான சுவாச நோய்கள் இருந்தாலும் அந்த விலங்குகல் குணமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றுக்கு அந்த இடத்தில் உள்ளவர்கள் அல்லது சுற்றுப்புறங்களில் உள்ளவர்களிடமிருந்து இந்த வைரஸ் பாதித்ததாக கருதப்படுகிறது என்று அமெரிக்க வேளாண்மைத் துறை மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மத்திய மையங்கள் தெரிவித்துள்ளன.

சில விலங்குகள் மக்களிடமிருந்து வைரஸ் தொற்று பெறலாம் என்று காணப்பட்டாலும் அந்த விலங்குகள் அதை மனிதர்களுக்கு கடத்துவதற்கான அறிகுறி இல்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Three more lions and four tigers more at bronx zoo test positive for coronavirus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X