தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 14 நாட்கள் அரசுமுறைப்பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக அவர் லண்டன் நகருக்கு சென்றுள்ளார்.
லண்டனில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு
லண்டன் வாழ் தமிழர்கள் முதல்வர் பழனிசாமிக்கு அளித்த வரவேற்பு
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணிதரத்தினை மேம்படுத்தும் வகையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் தமிழக அரசு மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
அவசர ஆம்புலன்ஸ் சேவைகளை மேம்படுத்துதல்
இங்கிலாந்தில் செயல்படுத்தப்படும் அவசர ஆம்புலன்ஸ் சேவைகளை மேம்படுத்தி அவற்றை தமிழகத்தில் செயல்படுத்துவது குறித்து லண்டனில் NHS நிறுவனத்துடன் ஆலோசனை
LSHTM நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து
தொற்றுநோய் நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் LSHTM நிறுவனத்துடன், "டெங்கு, மலேரியா நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் & அந்நோய்களை கையாளும் வழிமுறைகள்" தொடர்பாக StatementOfIntent கையெழுத்தானது
லண்டன் அத்தீனியம் சங்கத்தில் விருந்து உபசரிப்பு
200 வருட தொன்மையும், பாரம்பரியமும் கொண்ட லண்டன் அத்தீனியம் சங்கத்தில் (The Athenaeum Club); நோபல்பரிசு வென்ற 52பேர் உட்பட சான்றோர்கள் நிறைந்த சபையில், தென்னிந்திய விருந்துடன் மரியாதை
லண்டனில் உள்ள இங்கிலாந்து பாராளுமன்ற கூட்ட அரங்கில், நகர உட்கட்டமைப்பு,வீட்டுவசதி,பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்வது தொடர்பாக இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உரை
இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன்
அயல்நாடுகளில் மருத்துவத்துறையில் செயல்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பணித்தரத்தின் மேம்பாடுகளைக் கண்டறிந்து அவற்றை தமிழகத்தில் செயல்படுத்த சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினருடன் சந்திப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.