Todays viral : ஸ்கூல் பி.டி மாஸ்டர் என்றால் கையில் குச்சி வச்சிக்கிட்டு லெஃப்ட் ரைட் லெஃப்ட் -ன்னு மிரட்டிக்கிட்டே இருக்கணுமா என்ன? இப்படிகூட இருக்கலாம் என்று பாட்டு பாடி டான்ஸ் ஆடி காட்டுகிறார் சீனாவை சேர்ந்த பி.டி மாஸ்டர்.
Advertisment
இணையத்தில் வீடியோ ஒன்று செம வேகமாக வைரலாகி கொண்டிருக்கிறது. அது ஒரு பள்ளியில் எடுக்கப்பட்ட வீடியோ. சீனாவின் கன்சூ ((Gansu province)) மாகாணத்தில் பிங்லியாங் ((Pingliang)) என்ற இடத்தில் உள்ள பள்ளியில் எடுக்கப்பட்டது. இந்த பள்ளி ஒரு தொடக்கப்பள்ளி முழுசும் சிறுவர், சிறுமியர்கள் உள்ளனர்.
இந்த பள்ளியின் பி.டி மாஸ்டர் சாங் பெங்ஃப. இவருக்கு 40 வயதாகிறது. இவரது வேலை பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை பூஸ்ட் செய்வதுதான். அதாவது சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்க வைப்பதுதான். அதற்காக இவர் தன் பள்ளி மாணவர்களுக்கு டான்ஸ் கற்று கொடுக்கிறார்.
நம்ம ஊரில் காலையில் தமிழ்தாய் வாழ்த்து மாதிரி, இவர் இப்படி ஒரு விஷயத்தை கையில் எடுத்து உள்ளார். மாணவர்களை பல வரிசைகளில் நிற்க வைத்து எல்லாருக்கும் முன்னாடி போய் தான் நின்று கொண்டு ஆடுகிறார். இவர் ஆடுவதை பார்த்து மற்ற மாணவர்களும் ஆடுகிறார்கள்.
ஆனால் இதையெல்லாம் பார்க்கும்போது இவர் பி.டி ஆசிரியர் என்ற விஷயமே மறந்துபோய் டான்ஸ் மாஸ்டர் போல தெரிகிறார்.
மாணவர்களும் கால்களை, கைகளை நீட்டியும் நகர்த்தியும் ஆடுகிறார்கள். மாணவர்களுக்கு தவிர, இந்த டான்சை பார்ப்பவர்களுக்கும் சுறுசுறுப்பு வந்துவிடுகிறது. இந்த வீடியோ வைரலாகி வருவதுடன், இந்த டான்ஸ் மாஸ்டருக்கு ஸாரி... பி.டி மாஸ்டருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.