/tamil-ie/media/media_files/uploads/2020/04/template-2020-04-20T132300.386.jpg)
Tom and Jerry, Gene Deitch, Gene Deitch animator, Popeye the sailor, illustrator, academy award, cartoonist
டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனின் பல பகுதிகள் உள்ளிட்ட அனிமேசன் நிகழ்ச்சிகளின் இயக்குனரான ஜீன் டெய்ட்ச், பிராக் நகரில் காலமானார்.
அனிமேஷன் நிபுணர், கார்ட்டூன் பட ஓவியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்ட ஜீன் டெய்ட்ச், இதற்காக ஆஸ்கர் விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜீன் டெய்ட்சின் மரணத்தை செக் குடியரசு நாட்டின் முன்னணி பதிப்பகத்தாரான பீட்டர் ஹெம்மெல் உறுதிப்படுத்தியுள்ளார். பராகுவே நாட்டின் பிராக் பகுதியில் உள்ள அபார்ட்மென்டில் அவர் மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலும் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
1960ம் ஆண்டில் இவர் இயக்கிய முன்ரோ குறும்படத்திற்கு அகாடமி விருது வழங்கப்பட்டது. அதேபோல், 1964ம் ஆண்டு இவரின் நுட்னிக் அண்ட் ஹவ் டு அவாய்ட் பிரெண்ட்ஷிப் படத்திற்கும் விருது பரிந்துரைக்கப்பட்டது.
1958ம் ஆண்டில், இவர் உருவாக்கிய டாம் அண்ட் ஜெர்ரி சீரிஸ், அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்ட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1924ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி ஜீன் டெய்ட்ச் பிறந்தார். 1959ம் ஆண்டுவாக்கில் அவர் பிராக் வந்தார். அங்கு அவர் தங்கியிருந்த 10 நாட்களில், வருங்கால மனைவியான டென்காவுடன் கைகோர்த்தார்.
டாம் அண்ட் ஜெர்ரி நிகழ்ச்சியின் 13 பகுதிகள் மற்றும் பாபாய் தி சாய்லர் சீரிசையும் இவர் இயக்கினார்.
அனிமேஷன் துறையில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு வின்சார் மெகே விருது 2004ம் ஆண்டு வழங்கப்பட்டது.
ஜீன் டெய்ட்சின் 3 மகன்களும், அனிமேஷன் துறையில் நிபுணராக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.