உலக செய்திகள்: ஓவர்நைட்டில் நடந்த டாப் 5 நிகழ்வுகள்

உலகளவில் ஓவர்நைட்டில் நடந்த 5 முக்கிய சம்பவங்கள் குறித்து செய்தித்தொகுப்பு

1. காபூல் ட்ரோன் தாக்குதலில் அப்பாவிகளைக் கொன்றுவிட்டோம்- அமெரிக்கா மன்னிப்பு
கடந்த மாதம் காபூலில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.

ஆனால், உயிரிழந்தவர்கள் பயங்கரவாதிகள் அல்ல, சாதாரண மக்கள் தான். எங்களின் மிகப்பெரிய தவறுக்கு மன்னிப்பு கோருகிறோம் என பென்டகன் தெரிவித்துள்ளது.
2. ஒப்பந்தம் ரத்து: தூதரை திரும்ப அழைத்த பிரான்ஸ்

ஆஸ்திரேலியா,இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையே கையெழுத்திடப்பட்ட இந்தோ-பசிபிக் ஒப்பந்தம் கைவிட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான தனது தூதர்களை ஆலோசனைக்காக பிரான்ஸ் திரும்ப அழைத்துள்ளது.


இது அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பத்திற்காக,  பெரிய நீர்மூழ்கி கப்பலை வாங்க பிரெஞ்சு அரசுடன் போட்டியிருந்த ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்ததன் விளைவாக நடந்தது. 


3. கொலைக் குற்றவாளியான கோடீஸ்வரரின் வாரிசு ராபர்ட் டர்ஸ்ட்

கலிபோர்னியா நீதிமன்றம், மல்டி மில்லியனர் ரியல் எஸ்டேட் வாரிசு ராபர்ட் டர்ஸ்ட், 2000 ஆம் ஆண்டில் தனது நண்பர் சூசன் பெர்மனைக் கொலை செய்தது உறுதியாகியுள்ளது. கடந்த 39 ஆண்டுகளில் மூன்று மாகாணங்கள் மூன்று நபர்களைக் கொன்றதாக சந்தேகிக்கப்பட்டு வந்த ராபர்ட் மீது உறுதியான முதல் கொலை வழக்காகும்.


HBOதொலைக்காட்சி ஆவணப்படத் தொடரான “தி ஜின்க்ஸ்” இல் டர்ஸ்டின் வெளிப்படையான வாக்குமூலம் ஒளிபரப்பப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தீர்ப்பு வந்துள்ளது. அதில் டர்ஸ்ட், குளியலறையில் “நான் என்ன செய்தேன்? … அவர்கள் அனைவரையும் கொன்றேன்” என பேசியது அங்கிருந்த மைக்ரோபோனில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


4. தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டுப் பயணிகளுக்கு புதிய தளர்வுகள் – இங்கிலாந்து
தடுப்பூசி செலுத்திக்கொண்டு இங்கிலாந்துக்கு வெளிநாடுகளிலிருந்து தருபவர்களுக்கும், இங்கிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கும் புதிய தளர்வுகளை இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.


அக்டோபர் 4 ஆம் தேதி முதல், சிவப்பு, அம்பர் மற்றும் பச்சை என அந்தந்த நாடுகளின் கொரோனா எண்ணிக்கை வைத்துப் பிரித்து வகைப்படுத்தப்பட்டிருந்த உத்தரவு, ரத்து செய்யப்பட்டுச் சிவப்பு பட்டியல் மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது இந்தியா அம்பர் பட்டியலில் உள்ளது. இந்த உத்தரவு ரத்தாகுவதால், இங்கிலாந்து செல்லும் இந்தியப் பயணிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதன் மூலம், அவர்களின் செலவு குறைகிறது.


5.  அல்ஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி பூடெஃப்லிகா மறைவு
முன்னாள் அல்ஜீரியா ஜனாதிபதி அப்தெலசிஸ் பூடெஃப்லிகா நேற்று காலமானார். அவருக்கு வயது 84.  போராட்டங்கள் மற்றும் ராணுவத்தின் அழுத்தத்தின் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது பதவியிலிருந்து விலகினார்.


ஏப்ரல் 2019 இல் ராஜினாமா செய்வதற்கு முன்பு இரண்டு தசாப்தங்களாக வட ஆப்பிரிக்க நாட்டை ஆட்சி செய்தார். 2013 இல் பக்கவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரை பொதுவெளியில் பார்ப்பது அரிதான ஒன்றாகும்.

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Top 5 international news toda

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express