இலங்கை போறீங்களா..... மறக்காம இந்த இடங்களையெல்லாம் பாத்துருங்க

Srilanka : புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளை ஒன்று, அனுராதபுரத்தில் நடப்பட்டுள்ளது.

இலங்கை, நமக்கு மிகவும் பக்கத்தில் உள்ள இயற்கை எழில்மிகு அழகான நாடு ஆகும். இலங்கை நாட்டிற்கு சுற்றுலா சென்றால், பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. அந்த இடங்கள் எல்லாம் வரலாற்று சிறப்புவாய்ந்தவை என்பது கூடுதல் தகவல்.
இலங்கை நாட்டுக்கு சுற்றுலா சென்றால், மறக்காமல் இந்த இடங்களை எல்லாம் பார்த்துவிடுங்கள். அந்தளவிற்கு அற்புதமானது மட்டுமல்ல, இயற்கை ஆர்வலர்களின் பார்வை தாகத்திற்கு ஏற்ற இடம் இலங்கை என்று சொன்னால் அது மிகையல்ல.

இலங்கையில் பார்க்கவேண்டிய இடங்கள்

கண்டி

முன்னொரு காலத்தில், சிங்கள மன்னர்களின் கோட்டையாக இருந்தது. ஏரிகள் அதிகம் உள்ள பகுதியாக கண்டி உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இங்கு நடைபெறும் இசாலா பெராஹிரா திருவிழாவிற்கு, உலகெங்குமிலும் இருந்து பலர் வருகை தருகின்றனர்.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான யானைகள் ஊர்வலத்தில் கலந்துகொள்ள, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து யானைகள் கொண்டுவரப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளதை காண கண்கோடி வேண்டும்.

கொழும்பு

இலங்கை நாட்டின் தலைநகர் என்பது கூடுதல் சிறப்பு. எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நகரம். சுற்றுலா பயணிகளின் வருகையால், துரிதமாக வளர்ச்சியடையும் நகரமாக கொழும்பு உள்ளதாக சர்வதேச பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா

பிரிட்டிஷாரின் காலத்தில் இருந்தே, சிறந்த சுற்றுலா மற்றும் விடுமுறைத்தலமாக விளங்கிய நகரம். பசுமையான நகரம். இந்த பசுமையே, நுவரெலியாவின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளது. டீ எஸ்டேட்கள் அதிகம் இந்தபகுதியில் உள்ளன. எப்போதும் குளுகுளு என்று இருக்கும் வானிலை, சுற்றுலாப்பயணிகளை அதிகம்தன்பால் ஈர்த்து வருகிறது.

அனுராதபுரம்

அனுராதபுரம் நகரம், மூன்றாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக வரலாற்று தரவுகள் தெரிவிக்கின்றன. புத்த சமய மக்களின் வழிபாட்டுத்தலமாக இந்த நகரம் விளங்கிவருகிறது. புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளை ஒன்று, அனுராதபுரத்தில் நடப்பட்டுள்ளது. இந்த மரத்தை காண உலகின் பல்வேறு பகுதியிலிருந்து மக்கள் வருகை தருகின்றனர்.

யாழ் தேசிய பூங்கா

வன ஆர்வலர்களுக்கு ஏற்ற இடங்களில் மிக முக்கியமானது யாழ் தேசிய பூங்காவும் ஆகும். இது, இலங்கையின் இரண்டாவது பெரிய தேசிய பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. பனிக்கரடி, சிறுத்தை, யானை. காட்டு நீர்எருமை, மீனவ பூனைகள், இந்த பூங்காவில் மட்டுமே காணப்படும் அரிதான மிருகங்கள் ஆகும். இந்திய பாம்புகள் உள்ளிட்ட 46 வகை ஊர்வனவைகள் இந்த பூங்காவில் உள்ளன. குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் சிறந்த பொழுதுபோக்கு இடமாக இந்த பூங்கா விளங்கிவருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close