அமெரிக்காவின் நெவார்க் நகரத்துடன் நித்யானந்தாவின் கைலாசா நாடு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் அமைந்துள்ள இந்த நகரம் மக்கள் தொகை உள்பட பல்வேறு விஷயங்களில் முக்கிய நகரமாக உள்ளது.
இந்த ஒப்பந்தம் கைலாசா தூதர் விஜய ப்ரியா நித்யானந்தா, மேயர் பராகா ஆகியோர் இடையே ஏற்பட்டுள்ளது. மேலும், இதில் நியூ ஜெர்சி மாகாண அதிகாரிகள் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
-
கைலாசா அமெரிக்கா இடையே ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தம் பேரிடர், காலநிலை மாற்றம் போன்ற தாக்கங்களை பரஸ்பர உதவியுடன் எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்னைகள் குறித்து பேசுகின்றது.
மேலும் கல்வி, வன்முறை,வறுமை உள்ளிட்ட சமூக நலன் சார்ந்த விஷயங்கள் குறித்தும் பேசுகின்றன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் கைலாசா நாட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/