/indian-express-tamil/media/media_files/2025/09/04/trump-white-house-2025-09-04-07-24-28.jpg)
இந்தியா மீதான அமெரிக்க வரிகள் மீதான டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், "நாங்கள் முட்டாள்தனமாக அவர்களிடம் கட்டணம் வசூலிக்காததால், இந்தியா அமெரிக்காவுடன் வணிகம் செய்கிறது" என்று கூறினார். Photograph: (AP)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அன்று, உலகிலேயே அதிகபட்ச வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என மீண்டும் குற்றம் சாட்டினார். இந்திய இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 50% வரியை அவர் ஆதரித்துப் பேசினார்.
“இந்தியா எங்களை வரிகளால் கொல்கிறது” என்று டிரம்ப், தி ஸ்காட் ஜென்னிங்ஸ் ரேடியோ ஷோ-வுக்கு அளித்த பேட்டியில் கூறினார். “சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் அதிக வரியால் எங்களைக் கொல்கின்றன,” என்றும் அவர் கூறினார்.
மேலும், தனது அரசின் வரி விதிப்பு கொள்கைகள் இந்தியா போன்ற நாடுகளை வரி குறைப்புக்கு இணங்கச் செய்துவிட்டதாக டிரம்ப் கூறினார்.
“வரிகள் குறித்து உலகில் வேறு எந்த மனிதனையும் விட எனக்கு நன்றாகத் தெரியும். என் வரிக்கொள்கைகளால், அவர்கள் அனைவரும் வரிகளைக் குறைத்து வருகின்றனர். இந்தியா மிக அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இருந்தது. ஆனால், இப்போது இந்தியாவிற்கு எந்தத் தடையும் இல்லை, மேலும் வரிகளும் இல்லை என்று இந்தியா என்னிடம் கூறியது,” என டிரம்ப் தெரிவித்தார்.
VIDEO | US President Donald Trump, in reply to a question on tariff on India, says, "We get along with India very well, but India has, you have to understand, for many years, it was a one-sided relationship only now, since I came along, and because of the power that we have with… pic.twitter.com/YdfwUbvaz0
— Press Trust of India (@PTI_News) September 2, 2025
அவர் மேலும் கூறுகையில், “வரிகள் விதிக்கப்படாவிட்டால், அவர்கள் ஒருபோதும் அந்த ஒப்பந்தத்தை செய்ய மாட்டார்கள். எனவே, வரிகள் அவசியம். அப்போதுதான் நாம் பொருளாதார ரீதியாக வலுவாக இருப்போம்,” என்று தெரிவித்தார்.
டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு அமெரிக்க மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் பெரும்பாலான வரிகளை “சட்டவிரோதமானது” எனத் தீர்ப்பளித்தது. இது குறித்துப் பேசிய டிரம்ப், இந்த வழக்கிற்கு வெளிநாடுகள் நிதியுதவி அளிப்பதாகக் கூறினார். “காரணம், அவர்கள் நம்மைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் இனி நம்மைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது,” என அவர் தெரிவித்தார்.
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தை உதாரணமாகக் குறிப்பிட்ட டிரம்ப், 200% வரி காரணமாக அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனத்தால் இந்தியாவில் விற்க முடியவில்லை என்றார். இதனால், ஹார்லி டேவிட்சன் இந்தியாவில் மோட்டார்சைக்கிள் உற்பத்தி ஆலையை நிறுவியது, இதன் மூலம் அவர்கள் வரி செலுத்தத் தேவையில்லை என்றும் கூறினார்.
டிரம்ப் மேலும், “இந்தியா அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வருகிறது. ஏனெனில், நாம் முட்டாள்தனமாக அவர்களிடம் வரி வசூலிக்கவில்லை. அதன் விளைவாக, இந்தியா அதன் தயாரிப்புகளை நம் நாட்டில் குவித்தது. இதனால், நமது நாட்டில் அந்தப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படாது, இது ஒரு பாதகமான நிலை. அவர்கள் நம்மிடம் 100% வரி வசூலித்ததால், நாம் எதையும் அனுப்பவில்லை,” என்றும் கூறினார்.
— JD Vance (@JDVance) September 1, 2025
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த ஒரு பதிவில் டிரம்ப், “இது முற்றிலும் ஒருதலைப்பட்சமான பேரிடர்! இந்தியாவும் பெரும்பாலான கச்சா எண்ணெய் மற்றும் ராணுவ தளவாடங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறது. ஆனால், அமெரிக்காவிடம் இருந்து மிகக் குறைவாகவே வாங்குகிறது. தற்போது, அவர்கள் வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளனர், ஆனால் அது மிகவும் தாமதம். பல ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் இதைச் செய்திருக்க வேண்டும். இவை மக்கள் சிந்திக்க வேண்டிய சில உண்மைகள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.