Advertisment

கிரீன்லாந்தை வாங்குவதற்கு தீவிரம் காட்டும் டிரம்ப்: பதற்றத்தில் ஐரோப்பிய நாடுகள்

டென்மார்க் அரசின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்று டென்மார்க் பிரதமர் ஃபிரடெரிக்சன், டிரம்பிடம் வலியுறுத்தினார். இதனால் ஐரோப்பிய நாடுகள் இடையே பதற்றமான சூழல் இருக்கிறது.

author-image
WebDesk
New Update
Trump


அமெரிக்க அதிபர் டிரம்ப், டென்மார்க்கின் பிரதமர் மேட் ஃபிரடெரிக்சனின் உடனான சமீபத்திய தொலைபேசி உரையாடலின் போது கிரீன்லாந்தை வாங்குவதற்கான தனது கோரிக்கைகளை தீவிரப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஐரோப்பா முழுவதும் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. தி பைனான்சியல் டைம்ஸ் மேற்கோள் காட்டிய மூத்த ஐரோப்பிய அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆர்க்டிக் பிரதேசத்தின் மூலோபாய முக்கியத்துவத்தின் மீது ஃபிரடெரிக்சனுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. இது டேனிஷ் இறையாண்மையின் கீழ் ஒரு தன்னாட்சிப் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Tensions rise as Trump presses Denmark PM over Greenland in fiery call

 

Advertisment
Advertisement

கிரீன்லாந்தின் எந்தவொரு விற்பனையையும் ஃப்ரெடெரிக்சன் உறுதியாக நிராகரித்த போதிலும், தீவை கையகப்படுத்துவது அமெரிக்க தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு முக்கியமானது என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தினார்.

டிரம்ப் மற்றும் ஃபிரடெரிக்சன் இடையேயான 45 நிமிட தொலைபேசி உரையாடல் பதற்றமானது எனக் கூறப்படுகிறது. கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்திய நிலையிலும், இராணுவ தளங்கள் மற்றும் வள ஆய்வு போன்ற பகுதிகளில் விரிவாக்கப்பட்ட ஒத்துழைப்பை விவாதிக்க டென்மார்க் பிரதமர் முன்வந்தார்.

இதற்கு டிரம்ப் போர்த்தொனியில் பதிலளித்ததாக ஐரோப்பிய அதிகாரிகள் வட்டாரம் கூறுகிறது. மேலும், டென்மார்க்கின் நிலைப்பாட்டை நிராகரித்த டிரம்ப், கிரீன்லாந்தை வாங்குவதிலேயே தீவிரம் காண்பித்ததாக தெரிகிறது. இது டிரம்பின் கடுமையான அணுகுமுறையின் சாத்தியமான அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

"டிரம்ப் மிகவும் தீவிரமானவர் என்பதில் சந்தேகமில்லை. இது மிகவும் ஆபத்தான போக்கு" என அதிகாரிகள் கூறியதாக தி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

இந்த தொலைபேசி அழைப்பு ஐரோப்பாவில் அட்லாண்டிக் கடல் கடந்த உறவுகளின் எதிர்காலம் குறித்த கவலைகளை அதிகப்படுத்தியுள்ளது. அமெரிக்க நட்பு நாடுகளின் பிராந்தியத்தை விட்டுக்கொடுப்பதற்கு டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறார். கிரீன்லாந்து பற்றிய டிரம்பின் அறிக்கைகள் வெறும் பேச்சுவார்த்தை மூலோபாயத்தின் ஒரு பகுதி என்று கருதிய அதிகாரிகள், அவரது லட்சியங்கள் முன்பு இருந்ததை விட தற்போது தீவிரமானதாக இருக்கக் கூடும் எனக் கருதுகின்றனர்.

ஆர்க்டிக்கில் புவிசார் அரசியல் பங்குகள்

கிரீன்லாந்தின் மூலோபாய இருப்பிடம், அமெரிக்காவிற்கு மட்டுமின்றி, ரஷ்யா மற்றும் சீனாவிற்கும் மையமாக வைத்துள்ளது, இவை இரண்டும் ஆர்க்டிக்கில் தங்கள் இருப்பை அதிகரித்து வருகின்றன. அதன் உருகும் பனிக்கட்டிகள் புதிய கப்பல் பாதைகளைத் திறந்து, பயன்படுத்தப்படாத கனிம வளங்களை வெளிப்படுத்துவதால், ஆர்க்டிக் பகுதி புவிசார் அரசியல் போட்டியின் மையமாக மாறி வருகிறது.

கிரீன்லாந்தை கையகப்படுத்த ட்ரம்பின் உந்துதல், பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு நடவடிக்கையாக வெள்ளை மாளிகையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர், "அமெரிக்காவிற்கு கிரீன்லாந்தின் பாதுகாப்பு  முக்கியம் என்பதில் அதிபர் டிரம்ப் தெளிவாக இருக்கிறார், குறிப்பாக சீனாவும் ரஷ்யாவும் ஆர்க்டிக்கில் அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள்" எனக் கூறினார்.

அமெரிக்கப் பாதுகாப்பிற்கான தீவின் முக்கியத்துவத்தை வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ள நிலையில், கிரீன்லாந்தைத் தக்கவைத்துக் கொள்ள டென்மார்க்கிற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்று டிரம்ப் பகிரங்கக் கருத்துகளை வெளியிட்டார். மேலும் தேவைப்பட்டால் அமெரிக்கா இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

டென்மார்க்கின் பதில என்ன?

டிரம்பின் கருத்துகளுக்கு டென்மார்க் எச்சரிக்கையுடன் பதிலளித்துள்ளது. கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்று பிரதமர் ஃபிரடெரிக்சன் மீண்டும் வலியுறுத்தினார்.

சாத்தியமான பொருளாதார விளைவுகளை எதிர்பார்த்து, ஃபிரடெரிக்சன் ஏற்கனவே முக்கிய டேனிஷ் நிறுவனங்களான நோவோ நார்டிஸ்க் மற்றும் கார்ல்ஸ்பெர்க் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

America Donald Trump
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment