அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ராம்ப் டென்மார்க் நாட்டில் தன்னாட்சி நிலப்பகுதியாய் இருக்கும் கிரீன்லாந்து நாட்டை விலைக்கி வாங்கப் போவதாக தகவல் ஒன்று மிகவும் பிரபலமாகி வருகிறது.
ட்ராம்ப் தனது நட்பு வட்டாரத்துக்குள் இதை பற்றி பேசியதாகவும், ஆனால் தீர்க்கமாக யோசிகப்படவில்லை என்று "வால்ஸ்டிரீட் ஜர்னல்" என்ற பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
கிரீன்லாந்து விலைக்கு வாங்கும் எண்ணம் அமெரிக்காவிற்கு புதியது இல்ல, 1946-ம் ஆண்டே கிரீன்லாந்தை 100 கோடி அமெரிக்க டாலருக்கு விலைக்கு கேட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எதனால் இந்த முயற்சி:
கிரீன்லாந்து அருகில் இருக்கும் ஆர்க்டிக் பெருங்கடலில் அதிகப்படியான மீதன் ஹைட்ரேட்ஸ், இயற்கை வாய்வு அதிகமாக உள்ளது . இந்த இயற்கை வளங்களை ஆட்கொள்ள அமெரிக்க,சீனா,ரஷ்ய போன்ற நாடுகளுக்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது .உதரணமாக, யார் ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள ஹைட்ரோ-கார்பன்களை ஆட்கொள்கிரார்களோ அவர்களே, அடுத்த காலங்களில் உலகத்திற்கு சிம்ம சொப்பனமாய் மாறுவார்கள். சவுதி அரேபியாவும், அரபு எமிரேட்ஸ் நாடுகளும் பின்னுக்குத் தள்ளப்படும்.
இதைத் தண்டி கிரீன்லாந்திலே அதிகப் படியான இயற்கை வளங்கள், நில வளங்கள், கலாசார வளங்கள் உள்ளன.
கிரீன்லாந்து ஒத்துக்கொண்டதா?
இதுகுறித்து கிரீன்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன் லோன் (Ane Lone) கூறுகையில், ``எங்கள் கதவுகள் வியாபார வாய்ப்புகளுக்காக எப்போதும் திறந்திருக்கும். ஆனால், எங்கள் நாடு விற்பனைக்கல்ல’’ என்று தெரிவித்திருக்கிறார்.