உக்ரைனுக்கு ராணுவ உதவியை நிறுத்த டிரம்ப் உத்தரவு; அமைதியில் கவனம் செலுத்துவதாக அறிவிப்பு

கடந்த வெள்ளியன்று வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு, ரஷ்யாவுடனான போரில் உக்ரைனை அமெரிக்கா ஆதரித்ததற்கு போதுமான நன்றியுடன் அவர்கள் இல்லை என டிரம்ப் குற்றம்சாட்டினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Military aid

வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் ஏற்பட்ட மோதலின் சில நாட்களுக்குப் பிறகு, உக்ரைனுக்கான அனைத்து ராணுவ உதவிகளையும் நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Focused on peace’: Trump orders pause on US military aid to Ukraine after clash with Zelenskyy

"அமைதியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் அதிபர் தெளிவாக இருக்கிறார். அந்த இலக்கை அடைய நம்மைச் சேர்ந்தவர்களும் உறுதியாக இருக்க வேண்டும். தீர்வுக்கு பங்களிக்கும் வகையில் நமது உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது" என்று வெள்ளை மாளிகை அறிக்கை கூறுவதாக ராய்ட்டர்ஸ் மேற்கோள் காட்டியது.

கடந்த வெள்ளியன்று வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு, ரஷ்யாவுடனான போரில் உக்ரைனை அமெரிக்கா ஆதரித்ததற்கு போதுமான நன்றியுடன் அவர்கள் இல்லை என டிரம்ப் குற்றம்சாட்டினார்.

Advertisment
Advertisements

உக்ரைனில் இல்லாத அனைத்து அமெரிக்க ராணுவ உபகரணங்கள், விமானம் மற்றும் கப்பல் ஆகியவை அவைத்தும் போலாந்திலேயே இடை நிறுத்தம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவுடனான போர் நிறுத்தம் என்பது மிக மிகத் தொலைவில் உள்ளது என்று ஜெலென்ஸ்கி கூறியதற்கு, "இது ஒரு மோசமான பதில்" என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த திங்களன்று விமர்சித்திருந்தார்.

குறிப்பாக, "இது ஜெலென்ஸ்கியால் வெளியிடப்பட்ட மோசமான அறிக்கை. அமெரிக்கா இதை நீண்ட காலம் பொறுத்துக்கொள்ளாது" என டிரம்ல் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், உக்ரைனுடன் அதிருப்தி ஏற்பட்ட போதுலும், அந்நாட்டுடனான கனிம ஒப்பந்தத்திற்கு வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் கூறுகிறார். ஏனெனில், ஐரோப்பிய தலைவர்கள் ரஷ்யாவின் அண்டை நாடுகளுடனான போரில் ஒரு போர்நிறுத்தத்திற்கான திட்டங்களை முன்வைத்தனர்.

வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்த கனிம ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை" என்று டிரம்ப் பதிலளித்தார்.

America Ukraine

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: