Advertisment

7 வயது குழந்தையிடம் இப்படியா பேசுவது ? கிறிஸ்துமஸ் அன்றும் ட்ரோலான ட்ரெம்ப்

அதிபர் ஆன பின்பு, இன்று தான் முதல்முறையாக ட்ரெம்ப் உண்மையை பேசியிருக்கின்றார்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trump NORAD Santa Tracker Christmas phone calls

Trump NORAD Santa Tracker Christmas phone calls

Trump NORAD Santa Tracker Christmas phone calls : உலகம் முழுவதும் நேற்று உற்சாகமாக இயேசு பிறப்பினை போற்றும் விதமாக கிறிஸ்துமஸ் கொண்டாடினார்கள்.  நார்த் அமெரிக்கன் ஏரோஸ்பேஸ் டிஃபென்ஸ் காமெண்ட் (North American Aerospace Defense Command (NORAD)) என்ற அமைப்பு, கனடா மற்றும் அமெரிக்க நாடுகளின் வான்படை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை அறிவிக்கும் பாதுகாப்பு அமைப்பாகும்.

Advertisment

ஒவ்வொரு வருடமும், கிறிஸ்துமஸிற்கு முதல் நாள், சாண்ட்டாவின் பரிசுப் பொருட்களுக்காக காத்திருக்கும் குழந்தைகள், தங்களின் சாண்ட்டாக்கள் எங்கே இருக்கின்றார்கள் என்று இந்த அமைப்பிடம் அலைபேசியில் பேசுவது வழக்கம்.

Trump NORAD Santa Tracker Christmas phone calls

1955ம் ஆண்டு, கொலரடோவைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று, சாண்டாவுடன் இணைக்கும் தொலைபேசி எண்ணிற்கு பதிலாக நோராடின் எண்ணை மாற்றி பிரசுரம் செய்துவிட்டது. குழந்தைகள் அந்த கிறிஸ்துமஸ் அன்று, பாதுகாப்பு படையினருக்கு போன் செய்ய, குழந்தைகள் ஏமாந்து போக வேண்டாம் என்று சாண்ட்டாவினை ரேடார் மூலம் ட்ராக் செய்து அந்த குழந்தைகளிடம் அறிவித்தார் கர்னல் ஹாரி ஷௌப்.

அதன் பின்பு ஒவ்வொரு வருடமும், இது போன்று நோராட் நிகழ்ச்சியை நடத்தி குழந்தைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வது வழக்கமாகிவிட்டது. இம்முறை நோராட்டிற்கு சில குழந்தைகள் போன் செய்து தங்களின் சாண்டா எங்கே இருக்கிறார் என்று கேள்வி எழுப்பினர்.

கிறிஸ்துமஸ் சாண்டாவை இன்னுமா நம்புகின்றாய் ?

தெற்கு கரோலினாவைச் சேர்ந்த கோல்மன் என்ற 7 வயது சிறுமி போன் செய்து பேசினார். அப்போது அந்த குழந்தை அதிபர் டொனால்ட் ட்ரெம்பிடம் பேச வேண்டும் என்று கூறியது. அவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, 6 நிமிடங்கள் கழித்து டொனால்ட் ட்ரெம்ப்புடன் கோல்மன் பேசினார். அப்போது இன்னுமா நீங்கள் கிறிஸ்துமஸ் தாத்தாவை நம்பிக் கொண்டிருக்கின்றீர்கள். 7 வயது குழந்தைக்கு இது தேவையற்றது (Marginal) என்று கூறியது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. மற்றொரு பக்கம் டொனால்டின் மனைவி மெலனியா குழந்தைகளுக்கு சாண்ட்டாவை ட்ராக் செய்து கூறிக் கொண்டிருந்தார்.

Trump NORAD Santa Tracker Christmas phone calls - ட்ரெம்பினை வாட்டி வதைத்த நெட்டிசன்கள்

ட்விட்டரில் டொனால்ட்டின் இந்த செயலுக்கு கடுமையான கண்டனங்களையும் வரவேற்பினையும் ஒரு சேர பெற்றுள்ளது.

அதிபர் ஆன பின்பு, இன்று தான் முதல்முறையாக ட்ரெம்ப் உண்மையை பேசியிருக்கின்றார் என்று மற்றொரு பக்கத்தில் ட்ரெம்பின் செயலுக்கு நையாண்டியாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளனர் சிலர்.

Us President Donald Trump
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment