WHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு
சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாக குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த அமைப்புடனான உறவை முற்றிலும் துண்டிக்கவுள்ளதாக நேற்று அறிவித்தார்.
சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாக குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த அமைப்புடனான உறவை முற்றிலும் துண்டிக்கவுள்ளதாக நேற்று அறிவித்தார்.
சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாக குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த அமைப்புடனான உறவை முற்றிலும் துண்டிக்கவுள்ளதாக அறிவித்தார்.
Advertisment
"ஆண்டுக்கு சுமார் 450 மில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா செலுத்தி வருகிறது, இதனை ஒப்பிடும் போது சீனாவின் நிதியுதவி மிகமிக குறைவு. இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் மீது சீனா முழுமையான கட்டுப்பாடு கொண்டுள்ளது. தேவையான சீர்திருத்தங்களைச் செய்ய தவறிவிட்டதால், உலக சுகாதார அமைப்புடனான எங்கள் உறவை துண்டிக்கவுள்ளோம்,” என்று தெரிவித்தார்.'
புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு சீன நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், ஹாங்காங் பிராந்தியத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு வர்த்தக சலுகையை அகற்றுவதற்கான செயல்முறையைத் தனது நிர்வாகம் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
Advertisment
Advertisements
ஹாங்காங் பிராந்தியத்தில் முதன்முறையாக சீனா தனது சொந்த பாதுகாப்பு நிறுவனங்களை நிறுவுவதை இந்த சட்டம் வழி வகுக்கலாம் என்று கூறப்படுகிறது. இது, ஹாங்காங் பிராந்தியத்தின் சுதந்திரத்தையும், தனித்தன்மையையும் பறித்துவிடும் என்று ஜனநாயக ஆர்வலர்களும், மேற்கத்திய நாடுகளும் கருத்து தெரிவத்து வருகின்றனர்.
ஹாங்காங்கின் பெருமைமிக்க தனித்துவ அந்தஸ்தைக் குறைக்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஒன்றாகத் தான் சமீபத்திய நடவடிக்கை அமைந்துள்ளது. இது ஹாங்காங் மக்களுக்கும், சீன மக்களுக்கும், ஏன்..... உலக மக்களுக்கும் ஒரு சோகமான நிகழ்வு என்று தெரிவித்தார்.
"ஒரு நாடு இரு இரு சமூக அமைப்பு முறைகள்" என்னும் நெறிமுறையை 'ஒரே நாடு ஒரே கொள்கை' என சீனா மாற்றியுள்ளதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil