/tamil-ie/media/media_files/uploads/2020/06/New-Project-2020-06-29T215935.299.jpg)
Trump urged to ban Tiktok and other Chinese apps in USA :இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லையில் பதட்டமான சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் பயன்படுத்தப்படும் 59 ஆப்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு. டிக்டாக் உள்ளிட்ட வருமானம் தரும் செயலிகள் தடை செய்யப்பட்டதால் இதன் பயனர்கள் பெரும் அவதிக்கு ஆளாகினார்கள்.
இந்நிலையில் இந்தியாவை பின்பற்றி அமெரிக்காவும் டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் இருக்கும் எம்.பிக்கள், அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரெம்பிற்கு எழுதிய கடிதத்தில் “அதிநவீன உளவு பார்க்கும் கருவியாக டிக்டாக் அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது.
சீன அரசு இதனை பயன்படுத்தி அமெரிக்க மக்களின் தகவல்களை திருடிக் கொள்ளும் அபாயமும் உள்ளது. எனவே டிக்டாக் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இதற்கு முன்னுதாரணமாக இந்தியாவை எடுத்துக் கொண்டு அமெரிக்க அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு மாற்றாக சிங்காரி, இன்ஸ்டா ரீல்ஸ் போன்ற செயலிகள்/சேவைகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனாலும் டிக்டாக் போன்ற யூசர் ஃப்ரெண்ட்லி செயலிகள் இன்னும் கிடைக்கவில்லை என்று வருந்துகின்றனர் பயனர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.