அமெரிக்க விசாவுக்கு மாற்று வழி; டிரம்ப் அறிவித்த கோல்டு கார்டு திட்டம் என்ன?

அமெரிக்காவில் குடியுரிமை பெற விரும்பும் வசதி படைத்த இந்தியர்களுக்காக, டிரம்ப் நிர்வாகம் புதிய 'கோல்டு கார்டு' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு, அமெரிக்கக் கருவூலத்திற்குத் திரும்பப் பெற முடியாத சுமார் ரூ.8.3 கோடி தொகையை "பரிசாக" வழங்க வேண்டும்.

அமெரிக்காவில் குடியுரிமை பெற விரும்பும் வசதி படைத்த இந்தியர்களுக்காக, டிரம்ப் நிர்வாகம் புதிய 'கோல்டு கார்டு' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு, அமெரிக்கக் கருவூலத்திற்குத் திரும்பப் பெற முடியாத சுமார் ரூ.8.3 கோடி தொகையை "பரிசாக" வழங்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
US Gold Card

டிரம்ப் கோல்டு கார்டு: ரூ.8.3 கோடி 'பரிசு' கொடுத்தால் உடனே அமெரிக்கக் குடியுரிமை!

அமெரிக்காவில் வேலை தேடும் இந்தியர்களின் 'அமெரிக்கக் கனவு'க்கு புதிய சவாலும், வாய்ப்பும் ஒரே நேரத்தில் வந்துள்ளன. ஒருபுறம், டிரம்ப் நிர்வாகம் ஹெச்-1பி விசா கட்டணத்தை $1,00,000 (சுமார் ரூ.83 லட்சம்) ஆக அதிரடியாக உயர்த்தியுள்ளது. மறுபுறம், இதற்குக் போட்டியாக, பணம் உள்ளவர்களுக்காகக் குடியுரிமைக்கு 'கோல்டு கார்டு' (Gold Card) திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செப்.19-ஆம் தேதி நிர்வாக உத்தரவு மூலம் கையெழுத்திடப்பட்ட இந்தத் திட்டம், இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

Advertisment

அமெரிக்க கருவூலத்திற்கு திரும்பப் பெற முடியாத $1 மில்லியன் (சுமார் ரூ.8.3 கோடி) "பரிசு" வழங்க வேண்டும் அல்லது பெருநிறுவனங்களின் (Corporate Sponsorship) மூலம் $2 மில்லியன் (சுமார் ரூ.16.6 கோடி) முதலீடு செய்யலாம். இது, வழக்கமான EB-5 முதலீட்டாளர் விசா போலல்லாமல், "அமெரிக்கத் தொழில் மற்றும் வணிகத்திற்கான பங்களிப்பாக" நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஹெச்-1பி விசா கட்டணங்கள் திடீரென $100,000 ஆக உயர்ந்தது, இந்திய விண்ணப்பதாரர்களை பெரிய அளவில் பாதித்துள்ளது. இதுவே கோல்டு கார்டு திட்டத்தின் மீதுள்ள ஆர்வத்திற்குக் காரணம். குடியேற்ற ஆலோசனைகளான ஜினி கிரீன் கார்டு நிறுவனத்தின் சஹில் நியாதி, ஹெச்-1பி திருத்தங்களுக்குப் பின் ஆர்வம் தீவிரமாக உயர்ந்துள்ளது என்கிறார். பெரும்பாலான கேள்விகள், STEM (தொழில்நுட்பம்) பின்னணியை கொண்ட 30 மற்றும் 40 வயதுகளில் உள்ள மத்திய-பணிநிலை வல்லுநர்களிடமிருந்தே வருகின்றன.

குடியேற்ற நிறுவனமான டேவிஸ் & அசோசியேட்ஸ்ஸின் சுகன்யா ராமன், "H-1B அல்லது EB-5 பற்றி முதலில் விசாரித்தவர்கள் மத்தியில், கோல்டு கார்டு பற்றிய உரையாடல்கள் இந்த வாரம் மட்டும் 40% அதிகரித்துள்ளது எனக் குறிப்பிடுகிறார். கோல்டு கார்டுக்கான விண்ணப்பங்கள் குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக், "ஏறக்குறைய 2,50,000 பேர் ஆர்வம் தெரிவித்துள்ளனர்" என்று கூறியதாகச் சட்ட நிறுவனம் சிங்கானியா & கோ-வின் ரோஹித் ஜெயின் தெரிவித்தார். ஹெச்-1பி கட்டணம் உயர்ந்ததால், பெருநிறுவனங்களிடமிருந்து வரும் கேள்விகளும் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Advertisment
Advertisements

ஆனால், சட்ட வல்லுநர் ப்ராச்சி ஷா போன்ற சிலர், தென் ஆசிய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வம் இன்னும் மந்தமாகவே இருப்பதாகக் கூறுகின்றனர். இதற்கு முக்கியக் காரணம், $1 மில்லியன் தொகையைத் திரும்பப் பெற முடியாத உறுதிப்பாடாக வழங்க வேண்டும் என்ற அம்சம்தான் என்று அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், இந்த நிர்வாகம் 'டிரம்ப் பிளாட்டினம் கார்டு' என்ற கூடுதல் ப்ரீமியம் திட்டத்தையும் பரிசீலிக்கிறது. அதற்கு $5 மில்லியன் (சுமார் ₹41.5 கோடி) பங்களிப்பு தேவைப்படலாம். அமெரிக்க விசாக்களின் செலவுகள் அதிகரித்து வருவதால், வசதி படைத்த சில இந்தியர்கள் மாற்று நாடுகளைத் தேடத் தொடங்கியுள்ளனர் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

President Donald Trump

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: