அந்தரத்தில் தொங்கிய 3 வயது சிறுமி.. ஹீரோவாக மாறி குழந்தையை காப்பாற்றிய இளைஞர்கள்!

குழந்தையின் பெற்றோர்கள் தங்கள் மகளின் உயிரை காப்பாற்றிய இளைஞர்களை நேரில் அழைத்து விருந்து வைத்தனர்.

சீனாவில் தூக்கத்தில் நடக்கும் வியாதியால் ஜன்னல் வழியே குதிக்க இருந்த சிறுமியின் உயிரை இளைஞர்கள், உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

சீனா:

சீனாவில் உள்ள ஷங்ஷூ அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது தளத்தின் ஜன்னல் வழியே சிறுமி ஒருவர் நின்றுக் கொண்டிருந்தார். கண்களை மூடியப்படியே நின்றுக் கொண்டிருந்த அச்சிறுமி திடீரென்று கீழே விழ முயற்சித்தார். இந்த காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் சர சரவென கட்டிடத்தின் மீது ஏறி சிறுமியை காப்பாற்றினார்.

இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின. தங்களின் உயிரை பணயம் வைத்து சிறுமியை காப்பாற்றி இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில் குழந்தையின் பெற்றோர்கள் தங்கள் மகளின் உயிரை காப்பாற்றிய இளைஞர்களை நேரில் அழைத்து விருந்து வைத்தனர்.

அப்போது தான்,அந்த சிறுமிக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதால், அவள் தன்னை அறியாமல் நடந்து ஜன்னல் வழியாக குதிக்கம் நேரிட்டது தெரிய வந்தது. சிறுமியின் உயிரை காப்பாற்றிய இளைஞர்களை அந்நாட்டு அரசாங்கம் பாராட்டி அறிக்கையும் வெளியிட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close